SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

TNPSC குரூப் 4 தேர்வு.. எந்த துறைக்கு எத்தனை காலிப் பணியிடங்கள்? எந்த வயது வரை விண்ணப்பிக்கலாம்?

TNPSC Group 4 Explained: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் நிரப்பப்பட உள்ள பதவிகள், அதற்கு ஊதிய விவரங்கள், வயது விவரங்கள் குறித்து முழுமையாக இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written By Umabarkavi K
Published: Oct 07, 2026, 01:34 PM IST | Updated: Oct 07, 2026, 03:49 PM IST
Join

TNPSC Group 4 Explained: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனும் டிஎன்பிஎஸ்சி 2026ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வுக்காக அறிவிப்பை நேற்று (அக்டோபர் 6) வெளியிட்டது. குரூப் 4 மூலம் இந்தாண்டு மொத்தம் 6,574 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

குரூப் 4 தேர்வு

தமிழ்நாட்டில் அரசுப் பணிகளுக்கு செல்ல வேண்டும் என்று துடிக்கும் இளைஞர்களுக்கு மிகப்பெரிய நுழைவாயிலாக இருப்பது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தான். 2026ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு மூலம் 46 பதவிகளில் மொத்தம் 6,574 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

விண்ணப்பம் தொடங்கும் தேதி - அக்டோபர் 6

இணையவழியில் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் - நவம்பர் 5ஆம் தேதி பிற்பகல் 11.59 மணி வரை

விண்ணப்பத் திருத்த சாளர காலம் - நவம்பர் 9ஆம் தேதி மதியம் 12.01 மணி முதல் நவம்பர் 11ஆம் தேதி பிற்பகல் 11.59 மணி வரை

தேர்வு நடைபெறும் நாள், நேரம் - 2027 ஜனவரி 10 காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும்.

மேலும் படிக்க: மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! தெரிந்துகொள்ள வேண்டிய முழு விவரங்கள்

குரூப் 4 காலிப் பணியிடங்கள் விவரம்

வ.எண்பதவியின் பெயர்காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை
1.கிராம நிர்வாக அலுவலர் (தமிழ்நாடு அமைச்சகப் பணி)291 
2.இளநிலை உதவியாளர் (தமிழ்நாடு அமைச்சகப் பணி)28
3.வரித் தண்டலர் (தமிழ்நாடு அமைச்சகப் பணி)59
4.இளநிலை உதவியாளர் (தமிழ்நாடு அமைச்சகப் பணி)2610
5.இளநிலை உதவியாளர் (நீதி அமைச்சக் பணி)252
6.இளநிலை உதவியாளர் (தமிழ்நாடு நகர்மன்ற பணி)119
7.வருவாய் உதவியாளர் (நகர்மன்ற பணி)96
8.இளநிலை உதவியாளர் (மாநகராட்சி பணி)70
9.இளநிலை உதவியாளர் (ஆதி திராவிடர், வீட்டு வசதி மேம்பாட்டு கழகம்)43
10.இளநிலை உதவியாளர் (மாநகராட்சி பணி)134
11.வரி வசூலிப்பவர் (சென்னை மாநகராட்சி பணி)107
12.இளநிலை உதவியாளர் (சிறு தொழில் வளர்ச்சிக் கழகம்)25
13.இளநிலை உதவியாளர்  (கூட்டுறவு சங்கங்கள்)20
14.இளநிலை உதவியாளர் (காவலர் வீட்டு வசதி கழகம்)5
15.இளநிலை உதவியாளர் (மின்விசை நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம்)3
16.இளநிலை உதவியாளர் (மருத்துவ தாவரப் பண்ணைகள், மூலிகை மருத்துவக் கழகம்)6
17.இளநிலை உதவியாளர் (மின்பகிர்மான கழகம்)42
18.வரி தண்டலர் (நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு கழகம்)38
19.இளநிலை நிர்வாக உதவியாளர் (மாநில சட்டப்பணிகள் ஆணையக்குழு)42
20.இளநிலை நிர்வாக உதவியாளர் (கணிணி இயக்குபவர், மாநில சட்டப்பணிகள் ஆணையக்குழு)13
21.இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர்  (சட்டப்பேரவை தலைமை செயலக் பணி)6
22.தட்டச்சர் (நீதி அமைச்ச பணி)856
23.தட்டச்சர் (நீதி அமைச்சக பணி)15
24.தட்டச்சர் (சிறு தொழில் வளர்ச்சிக் கழகம்) 6
25.தட்டச்சர்  (வக்பு வாரியம்)260
26.தட்டச்சர் (நகர்மன்ற பணி)56
27.தட்டச்சர் (சென்னை மாநகராட்சி பணி)2
28.தட்டச்சர் (காவலர் வீட்டு வசதிக் கழகம்)209
29.சுருக்கெழுத்தர் தட்டச்சர் நிலை 3 (அமைச்சக பணி)145
30.சுருக்கெழுத்தர் தட்டச்சர் நிலை 3 (நீதி அமைச்சகப் பணி)1
31.சுருக்கெழுத்தர் தட்டச்சர் நிலை 3 (ஆதி திராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம்)2
32.சுருக்கெழுத்தர் தட்டச்சர் நிலை 3 (சிறு தொழில் வளர்ச்சிக் கழகம்)2
33.சுருக்கெழுத்தர் தட்டச்சர் நிலை 3 (வக்பு வாரியம்)1
34.சுருக்கெழுத்தர் தட்டச்சர் நிலை 3 (சென்னை மேம்பாட்டு கழகம்)16
35.சுருக்கெழுத்தர் தட்டச்சர் (நகர்மன்ற பணி)60
36.நேர்முக தட்டச்சர் நிலை 3 (மாநகராட்சி பணி)28
37.சுருக்கெழுத்தர் தட்டச்சர் நிலை 3 (சென்னை மாநகராட்சி பணி)1
38.தொலைபேசி இயக்குபவர் (தடயவியல் சார் நிலைப் பணி)46
39.செயல் அலுவலர் நிலை 4 (இந்து சமய அறநிலையத்துறை)8
40.கூட்டுறவு சங்கங்களில் இளநிலை உதவியாளர் 19
41.பதிவுறு எழுத்தர் நிலை 3 (தொழில்துறை முதலீட்டு கழகம்)1
42.முதுநிலை ஆய்வக உதவியாளர் (அரசு ரப்பர் கழகம்)23
43.ஆய்வக உதவியாளர் (தடய அறிவியல் சார்நிலைப் பணி)10
44.விற்பனை உதவியாளர் (கைவினைப் பொருட்கள் வளர்ச்சிக் கழகம்)40
45.வனக் காவலர் (வனச் சார்நிலைப் பணி)10
46.ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் (வனச் சார்நிலை பணி)1
                                                                                                                                     மொத்தம்6,574 காலிப் பணியிடங்கள்

எந்த வயது வரை எந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்?

கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு உச்ச வயதை பொறுத்தவரை 40 வயதுக்குள் இருக்க வேண்டும். இதில் அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் 50, முன்னாள் ராணுவத்தினர் 53, ஆதரவற்ற கைம்பெண்களுக்கு 40 இருக்க வேண்டும். இது வயது வரம்பு பிற்படுத்த வகுப்பினர்,  பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர், ஆதி திராவிடர், ஆதி திராவிடர் (அருந்ததியர்), பட்டியல் பழங்குடியினருக்கு மட்டுமே பொருந்தும்.

பிற வகுப்பினருக்கு கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் என அனைத்து பணிகளுக்கு அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 40 வயது, முன்னாள் ராணுவத்தினர் 48, ஆதரவற்ற கைம்பெண்கள் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.  செயல் அலவலர் பணிக்கு 35 வயதும், கூட்டுறவு சங்களின் உதவியாளர் பணிக்கு 30 வயதும், பதிவுறு எழுத்தர் பணிக்கு 30 வயதும், முதுநிலை ஆய்வக உதவியாளர் பணிக்கு 30 வயதும், வனக் காப்பாளர் பணிக்கு 30 வயதும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் படிக்க: ஆவின் பால் தட்டுப்பாடு உண்மையா? விசிட் அடித்த CM விஜய் - அமைச்சர் சொன்ன விளக்கம்

விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வு கட்டணம்

விண்ணப்ப கட்டணமாக தேர்வர்கள் ரூ.100 செலுத்த வேண்டும். சிறப்பு பிரிவுகளைச் சேர்ந்த தேர்வர்கள் அப்பிரிவுகளின் அடிப்படையில் தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு பெறலாம். இணையவழி  விண்ணப்பத்தில் உரிய விவரங்களைப் பதிவு செய்த பின்னர், விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் தேர்வர் தேர்வுக் கட்டணத்தை இணைய வழியில் செலுத்த வேண்டும். யுபிஐ, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேக்கிங் வாயிலாக என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தமிழகத்தில் வாக்காளர் பெயர்கள் நீக்கம்? ராகுல் காந்தி மௌனம் காப்பது ஏன்? திமுக காட்டம்!!
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES