SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

எம்எல்ஏக்களுக்கு கார்.. திமுக வாங்க மறுத்த காரணம் இதுதான்.. செங்கோட்டையன் சொன்ன விஷயம்

TVK Sengottaiyan Latest News: எம்எல்ஏக்களுக்கு அரசு சார்பில் வழங்கும் காரை திமுக வாங்க மறுத்துள்ளது. நிதி சுமை காரணமாக கார் வேண்டாம் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம் செய்துள்ளார்.

Written By Umabarkavi K
Published: Aug 22, 2026, 04:33 PM IST | Updated: Aug 22, 2026, 04:52 PM IST
Join

TVK Sengottaiyan Latest News: சட்டமன்றக் கூட்டத்தொடரை முடித்து விட்டு சென்னையில் இருந்து கோவை பீளமேடு விமான நிலையத்திற்கு வருகை தந்த அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் சம்பத் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். 

வார்த்தை ஜாலங்களைத் தவிர்ப்பது நல்லது

அப்போது சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்துப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "பேரவைத்தலைவர் மற்றும் தமிழக முதல்வர் குறிப்பிட்டதைப் போல, சட்டப்பேரவையைப் பொறுத்தமட்டில் எதிர்காலத்தில் என்ன செய்யலாம் என்பது குறித்த ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டால் நன்றாக இருக்கும் என்றும் தேவையற்ற வார்த்தை ஜாலங்களைத் தவிர்ப்பது நல்லது” என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "வறட்சி நிவாரணம் தொடர்பாகப் பேசுகையில் நிலத்தின் தன்மை எவ்வாறு மாறியுள்ளது என்பது குறித்துத் தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வுகளுக்குப் பிறகே நிவாரணம் வழங்கப்படும் என்பதால் வறட்சி நிவாரணத் தொகை செப்டம்பர் மாதத்திற்குப் பிறகுதான் வழங்கப்படும் எனத் தெளிவுபடுத்தினார்.

தொடர்ந்து நிதி நெருக்கடி கார் விவகாரம் குறித்து பேசியவர் நிதிச் சுமை இருந்தாலும் மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைத் தன்னலம் கருதாது நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு உள்ளது என்றும், ஆந்திராவிலும் இதுபோன்று வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். 

திமுக குறைக்கூறி வருகிறது

நிதி நெருக்கடி காரண காட்டி திமுகவால் இவற்றைச் செய்ய முடியவில்லை என்பதால் தொடர்ந்து விமர்சித்து வருவதாக அவர் குற்றம்சாட்டினார். சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கார் வழங்கும் விவகாரம் குறித்த கேள்விக்கு, சட்டமன்ற உறுப்பினர்கள் சிறப்பாகச் செயல்படக் கார் மற்றும் உதவியாளர்கள் அவசியமான ஒன்று எனப் பதிலளித்தார்.

நகராட்சித் தலைவர்கள் உட்பட பலருக்கும் வாகனங்கள் வழங்கப்படுவதாகவும் முந்தைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலும் இதுபோன்று வழங்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அவர் தற்போது அவர்களால் செய்து கொடுக்க முடியாத சூழல் காரணமாகவே இதைக் குறை கூறி வருவதாகத் தெரிவித்தார்.

மேலும் மூன்று கோப்புகள் நிலுவையில் உள்ளதாக அமைச்சர் கூறியது குறித்த கேள்விக்கு, சட்டத்தின் அடிப்படையில் அந்தக் கோப்புகளை முழுமையாக ஆராய்ந்து அதில் என்ன விவரங்கள் உள்ளன என்பதைப் பார்த்த பிறகே அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

எம்எல்ஏக்களுக்கு கார்

பொருளாதார பலமில்லாமல் சட்டமன்ற உறுப்பினர்களாக பணியாற்றும் மற்றும் முதல் முதலாக சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தங்களது மக்கள் பணியை தொய்வின்றித் தொடர்வதற்கும். அவர்கள் தங்களின் தொகுதிப் பணிகளைத் திறம்பட வசதியாக சட்டமன்ற மேற்கொள்வதற்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி சார்ந்த பல்வேறு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக சட்டமன்ற உறுப்பினர்கள் உதவியாளரை நியமித்துக் கொள்வது அவசியம் ஒரு கருதப்படுகிறது. எனவே, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு வாங்கி வழங்கும் வாகனத்தை பராமரிக்கும் விதமாக, வாகனத்திற்கு ஓட்டுநர். எரிபொருள், வாகனப் பராமரிப்பு உள்ளிட்ட செலவினங்களுக்காக மாதந்தோறும் ரூபாய் 75,000/- வாகனப் படியாகவும், அலுவலகப் பணிகளில் உதவிசெய்ய ஓர் உதவியாளரை நியமித்துக் கொள்ள மாதந்தோறும் ரூபாய் 25,000/- உதவியாளர் படியாகவும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES