SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Beef சாப்பிடுவியா? பள்ளியில் ஆசிரியர் கேட்ட கேள்வி.. மாணவர் எடுத்த விபரீத முடிவு.. வகுப்பறையில் நடந்த கொடூரம்

Coimbatore Student Suicide: கோவையில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த 11ஆம் வகுப்பு பள்ளி மாணவன் அகிலன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவன் அகிலன் தற்கொலை வழக்கில் ஆசிரியர் விஜயகுமார் கைதாகி உள்ளார்.

Written By Umabarkavi K
Published: Oct 22, 2026, 12:09 PM IST | Updated: Oct 22, 2026, 01:17 PM IST
Join

Coimbatore Student Suicide: நாடு முழுவதும் சாதிய ரீதியான ஒடுக்குமுறைகள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. என்னதான் ஏஐ போன்ற நவீன தொழில்நுட்பம் வந்தாலும், பல்வேறு மாநிலங்களில் சாதிய ரீதியான பேச்சுகள், ஒடுக்குமுறைகள், வன்முறைகள் என தொடர்ந்து நடந்து வருகிறது.  பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என கல்வி நிறுவனங்களிலேயே இது நடப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதில் பட்டியலின், பழங்குடி பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் பட்டியலின வகுப்பை சேர்ந்த மாணவர் அகிலன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பட்டியலின மாணவர் தற்கொலை

கோவை பீளமேடு பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வந்தவர் அகிலன். இவர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாணவர். மாணவர் அகிலன் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிற்பகலில் அகிலனின் தாயார்  கௌசல்யா வீட்டுக்கு வந்த போது மாணவன் அகிலன்  தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து சம்பவம் குறித்து கௌசல்யா பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரில் தனது மகன் படித்து வரும் பள்ளியில் சாதி ரீதியாக பேசியதாகவும், இதனால் மன உலைச்சலில் இருந்த அகிலன் தற்கொலைக்கு அவருடன் படித்த சக மாணவர்கள் இருவர், வகுப்பு ஆசிரியர் விஜயகுமார் மற்றும் தலைமை ஆசிரியர் அருண் குமார் ஆகிய நான்கு பேர் காரணம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து பீளமேடு போலீசார் ஆசிரியர்கள், மாணவர்கள் என 4 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

தற்கொலைக்கு தூண்டுதல், தன்னிச்சையாக காயம் ஏற்படுத்துதல், தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமை ஆகிய மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்ததை அடுத்து, தலைமை ஆசிரியர் அருண்குமார் தலைமறைவாகினார். தலைமறைவான ஆசிரியர் அருண்குமாரை போலீசார் தேடி வந்த நிலையில், இன்று போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். தற்போது வகுப்பு ஆசிரியர் விஜயகுமார் மற்றும் தலைமை ஆசிரியர் அருண்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

பள்ளி வகுப்பறையில் நடந்தது என்ன?

மாணவர் அகிலன் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக வகுப்பு ஆசிரியர்கள் விஜயகுமார் முக்கிய காரணம் என கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, வகுப்பறையில் யாரெல்லாம் கல்வி உதவித்தொகை வாங்குகிறீர்கள் என ஆசிரியர் விஜயகுமார் கேள்வி எழுப்பி இருக்கிறார். அப்போது மாணவ அகிலன் தான் உதவித்தொகை வாங்குவதாக எழுந்து கூறியிருக்கிறார்.

அப்போது, மாணவின் சாதி என்று என்று, ஆசிரியர் விஜயகுமார் அனைத்து மாணவர்கள் மத்தியிலும்  கேட்க, மாணவர் அகிலனும் தான் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என கூறியிருக்கிறார். இதனை கூறிய பிறகு, பட்டியலினத்தில் எந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் என ஆசிரியர் கேட்க, அதனை மாணவரும் கூறி இருக்கிறார். இதன்பிறகு, அனைத்து மாணவர்களின் மத்தியில் அப்போ நீங்கள் ட்டுக்கறி சாப்பிடுவீர்களா என கேள்வி கேட்டுள்ளார்.  

அதற்கு மாணவரும் ஆமாம் என்ற கூறவே, அன்றில் இருந்து சக மாணவர்கள் அகிலனை சாதிப்பெயர் சொல்லி திட்டியும், அடித்தும் வந்துள்ளதாக கூறப்படுகிறது.  இது குறித்து மாணவர் அகிலன் தலைமை ஆசிரியர் அருண்குமாரிடம்  முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு, வகுப்பறையில் வேறு பிரச்னை ஏற்பட்டு இருக்கிறது. அப்போது, மாணவன் அகிலனை சாதி குறித்து சக மாணவர்கள் பேசிய நிலையில, மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க: கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை!

மாணவனின் தந்தை கூறியது என்ன?

இது குறித்து பேட்டி அளித்த மாணவனின் தந்தை அசோக் குமார் கூறுகையில், அரசு உதவி பெறும்  பள்ளியில் தனது மகனின் அடையாளம் குறித்து தெரிந்த பின்னர், சக மாணவர்கள் பேசுவதை தவிர்ததாகவும் இது குறித்து பள்ளியில் முறையிட்ட பொழுது அப்படி எதுவும் இல்லை நாங்கள் விசாரிக்கிறோம் என கூறியதாகவும் தெரிவித்தார்.ஆனால் பள்ளி ஆசிரியர்கள் சாதிய மனோ நிலையில் இருந்ததாக குற்றம் சாட்டிய அவர் தனது மகன் அகிலன் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும், தற்கொலைக்கான காரணத்தை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  இல்லையெனில் மாணவரின் உடலை பெற மாட்டோம் எனவும் தெரிவித்தார்.

(தற்கொலை எண்ணங்களால் அவதிப்படுபவர்கள் அல்லது மன அழுத்தத்தில் இருப்பவர்கள் உடனடியாக உதவி பெற தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: • சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் (சென்னை): 044-24640050 அல்லது 044-24640060; தமிழ்நாடு அரசின் மருத்துவ உதவி மையம்: 104; டெலி-மானஸ் (Tele-MANAS) உதவி எண்: 14416)

மேலும் படிக்க: CJP-க்கு அண்ணாமலை ஆதரவு: "டெல்லி போலீஸ் அணுகுமுறை தப்பு.. சிறை அவர்களை தலைவர்களாக்கும்!"
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES