• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /உலகம்
  • /Explained : 2 விஷ ஊசி போட்டும் சாகாத பெண்..இப்போது உடல்நிலை எப்படி இருக்கு?

Explained : 2 விஷ ஊசி போட்டும் சாகாத பெண்..இப்போது உடல்நிலை எப்படி இருக்கு?

சில தினங்களுக்கு முன்பு, மரண தண்டனையை நிறைவேற்றும் பொருட்டு, கிறிஸ்டா பைக் எனும் பெண்ணிற்கு விஷ ஊசி இருமுறை செலுத்தப்பட்டு தோல்வியில் முடிந்தது. இதையடுத்து அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

Written ByYuvashree M
Published: Oct 07, 2026, 02:26 PM IST|Updated: Oct 07, 2026, 02:31 PM IST
joinshare
Explained : 2 விஷ ஊசி போட்டும் சாகாத பெண்..இப்போது உடல்நிலை எப்படி இருக்கு?
Image Credit: Christa Pike | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
‘அன்பில் அவன்’ வெற்றி விழா : அசோக் செல்வன் எமோஷனல் பேச்சு..என்ன சொன்னார்?

‘அன்பில் அவன்’ வெற்றி விழா : அசோக் செல்வன் எமோஷனல் பேச்சு..என்ன சொன்னார்?

2

Explained : 2 விஷ ஊசி போட்டும் சாகாத பெண்..இப்போது உடல்நிலை எப்படி இருக்கு?

3

3 நாளாக ரத்தப்போக்கு.. 6 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை.. சென்னையில் ஷாக்

4

ஆவின் பால் தட்டுப்பாடு உண்மையா? விசிட் அடித்த CM விஜய் - அமைச்சர் சொன்ன விளக்கம்

5

Nandini Milk: பால் விலை லிட்டருக்கு ரூ.8 உயர்வு.. வெளியான அதிர்ச்சி தகவல்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

“விஷ ஊசி போட்டும் சாகாத பெண் குற்றவாளி..ஃபெயில் ஆன மரண தண்டனை..” என்பதுதான், கடந்த சில நாட்களாக அனைத்து செய்திகளிலும் தலையங்கமாக இருந்தது. இதையடுத்து, கிறிஸ்டா பைக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து அப்டேட் இப்போது வெளியாகி இருக்கிறது.

தோல்வியில் முடிந்த மரண தண்டனை!

சில தினங்களுக்கு முன்பு, 1995ஆம் ஆண்டு செய்த கொலை குற்றத்திற்காக கிரிஸ்டா பைக் எனும் பெண்ணிற்கு சமீபத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. அங்கு மரண தண்டனை என்றால் விஷ ஊசி செலுத்துவது தான் நெறிமுறையாக இருக்கிறது. கடந்த வாரம் கிறிஸ்டா பைக்கிற்கு இரண்டு முறை விஷ ஊசி செலுத்தப்பட்டும் அவர் சுயநினைவுடன் இருந்ததால் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இப்போது உடல் நிலை என்ன?

கிறிஸ்டா பைக் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் அவர் சுயநினை உடன் இருப்பதாகவும் பேசுவதாகவும் அவரைப் பார்த்து அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். கிறிஸ்டா பைக்குக்கு தற்போது அம்பது வயது ஆகும் நிலையில் மருத்துவமனையில் கை விலங்கிடப்பட்ட நிலையில் அவர் தீவிர மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக வழக்கறிஞர்கள் கூறப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க | Explained : மரண தண்டனை..2 முறை விஷ ஊசி போட்டும் சாகாத பெண்! என்ன காரணம்?

மருத்துவர்கள் சொல்வது என்ன?

கிறிஸ்டா பைக், விஷ ஊசி செலுத்தப்பட்ட இரண்டு முறையும் அதிலிருந்து தப்பி இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் அவர் உயிர் தப்பியதும் குணமடைந்து வருவதும் இதற்கு முன்னர் எப்போதும் நிகழாத ஒரு அரிய சம்பவமாக இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மரண ஊசி செலுத்தப்பட்ட பின்பும் மரண தண்டனையிலிருந்து உயிர் பிழைத்த ஒரே நபராக இவர் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. உயிரிழக்க செய்வதற்காக செலுத்தப்பட்ட ரசாயனத்தை அவர் உடலில் இருந்து அகற்றியதாகவும் இதனால் அவர் பல நாட்கள் சுயநின்றி இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொலை வழக்கு!

கிறிஸ்டா பைக் 1995ஆம் ஆண்டு 18 வயது பெண்ணாக இருந்தபோது தன்னுடன் பணியாற்றி வந்த கொலீன் ஸ்லிம்மர் எனும் பெண்ணை கொலை செய்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.

கிறிஸ்டா, தன்னுடைய காதலரை கொலீன் பறித்துக் கொள்ள முயற்சி செய்வதாக கூறி தன்னுடைய காதலர் மற்றும் நண்பர் ஒருவருடன் சேர்ந்து இந்த கொலையை நிகழ்த்தினார். இதில் இவரது காதலர் கொலை நடந்த சமயத்தில் 17 வயது உடையவர் என்பதால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் கிறிஸ்டாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த மரண தண்டனை நிறைவேறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு இருந்து பொதுமக்கள் பல இவருக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியிருந்தனர். கிறிஸ்டாவிற்கு சிறுவயதிலிருந்தே பலவித வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்டிருந்ததாகவும், அதன் விளைவாக இருந்த அவரது அசாதாரண மனநிலையை கருத்தில் கொள்ளாமல் அவருக்கு மரண தண்டனை உதிக்கப்பட்டதாகவும் கூறி இதை வழக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என போராட்டம் நடத்தினர். இருப்பினும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆனால் கிறிஸ்டா அதிலிருந்து உயிர் பிழைத்திருக்கிறார்.

மீண்டும் மரண தண்டனை விதிக்கப்படுமா?

கிறிஸ்டா பைக்கிற்கு மீண்டும் மரண தண்டனையை நிறைவேற்ற அதிகாரிகள் முயற்சி செய்வார்களா, என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது. இது குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

பென்டோபார்பிட்டால் எனும் ரசாயனம் அவருக்கு செலுத்தப்பட்ட பின்னர், என்ன தவறு ஏற்பட்டது என்பதற்கான எந்த விளக்கமும் இதுவரை அதிகாரிகளிடத்தில் இல்லை. இருப்பினும், கிறிஸ்டாவிற்கு நரம்புகள் அனைத்தும் சின்னதாக இருக்கும் குறைபாடு இருப்பதாகவும், இதனால் ஊசியை செலுத்த, நரம்பை அதிகாரிகள் நெடுநேரமாக தேடியதாகவும் கூறப்பட்டது. டென்னசி ஆளுநர் பில் லீ, இந்த ஆண்டின் எஞ்சிய காலத்திற்கு அனைத்து மரண தண்டனை நிறைவேற்றங்களையும் நிறுத்தி வைத்திருக்கிறார். மேலும், இந்த மாகாணத்தின் சிறைச்சாலைகளின் தலைமை அதிகாரி, தான் பதவி விலக திட்டமிட்டிருப்பதாக கூறியிருந்தார்.

இது முதன்முறையல்ல..

ஒரு மரண தண்டனை ஃபெயில் ஆவது அமெரிக்காவில் இது முதன்முறையல்ல. அமெரிக்கா முழுவதும், கடந்த 2022ஆம் ஆண்டில், நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகளில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானவை, தோல்விய்ல் முடிந்தவைகளாக இருக்கின்றன. அப்படி இல்லையெனில், கடுமையான பிரச்சனைகளுடன் கூடியவையாக இருந்திருக்கின்றன. இது போன்ற வழக்குகள் குறித்த தகவல்களை திரட்டும் மரண தண்டனை தகவல் மையம் இந்த தகவலை தெரிவித்திருக்கிறது.

மரண ஊசி மூலமாக, மரண தண்டனை நிறைவேற்றும் சம்பவங்களில், ரத்த நாளங்களில் நம்பகமான முறையில் நரம்புவழி ஊசி செலுத்துவதில், சிரமம் ஏற்படுவதன் காரணமாகவே இந்த சம்பவங்கள் பொதுவாக நிகழ்வதாக கூறப்படுகிறது. இருப்பினும், ஒவ்வொரு நபரை பொறுத்தும் இது மாறுபடும்.

மரண ஊழி மருந்துகள், கைதிகளுக்கு வழங்கப்படும் முன்பே, அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததாக மரண தண்டனை மையம் தெரிவித்துள்ளது. தோல்வியடைந்த மரண ஊசி மரண தண்டனை முயற்சியாக அந்த மையம் பதவி செய்துள்ள சமீபத்திய சம்பவம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்தது. இதுவும், இதே டென்னசியில்தான் நிகழ்ந்தது.

கடந்த 1994ஆம் ஆண்டு, மூவரை கடத்தி கொலை செய்த குற்றத்திற்காக டோனி காரத்தர்ஸ் எனும் நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றும் முயற்சி நிகழ்ந்தது. ஆனால், ஊசி செலுத்துவதற்கான ரத்த  நாஅளத்தை பணியாளர்களால் கண்டறிய முடியாததால், அவருக்கு ஓராண்டு கால ஒத்திவைப்பு வழங்கப்பட்டிருந்தது.

மேலும் படிக்க | உலகையே திரும்பிப் பார்க்க வைத்த நியூட்ரினோ ஆய்வு! இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்ற பிரான்சிஸ் ஹால்சன்

Add Zee News as a Preferred Source
TAGS:
Explainer