SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Explained | ஜென்சன் ஹுவாங் மீண்டும் என்விடியா CEO ஆனது எப்படி? சீன காதலி எங்கே?

என்விடியா எனும் தொழில்நுட்ப நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக இருந்த ஜென்சன் ஹுவாங், நிறுவனத்தை விட்டு நீக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் அதே பதவியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Nov 24, 2026, 14:18 IST | Updated: Nov 24, 2026, 14:26 IST
Image Credit: Jensen Huang Nvidia CEO | X Page
Join

என்விடியா நிறுவனத்தின் முதன்மை செயலாளராக இருந்த ஜென்சன் ஹுவாங், சீன உளவாளி என சந்தேகிக்கப்பட்ட பெண்ணுடன் காதல் உறவில் இருந்ததாக ஏற்பட்ட சர்ச்சைக்கு பிறகு பதவி விலகினார். தற்போது, என்விடியா நிறுவனத்தின் நிர்வாக குழுவினர் ஒருமனதாக எடுத்த முடிவின்படி, அவர் மீண்டும் அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் தலைவராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

சீன உளவாளியுடன் உறவா..?

ஜென்சன் ஹுவாங், என்விடியாவின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த போது, ஆலிஸ் ஹுவாங் என்பவருடன் உறவில் இருந்தார். ஆலிஸ், சிங்கப்பூரை சேர்ந்த மெகாஸ்பீட் இண்டர்நேஷனல் எனும் நிறுவனத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர். இந்த நிறுவனம், என்விடியா சிப்களின் முக்கிய வாடிக்கையாளராக இருந்தது.

ஜென்சன் ஹுவாங் உடனான உறவில் இருந்த காலத்தில், சீனாவின் உலவுத்துறையுடன் ஆலிஸ், தொடர்பில் இருந்ததாக அமெரிக்க புலனாய்வு தகவல்கள் தெரிவித்ததாக செய்திகள் வெளியகின. மேலும், ஏஐ சிப்களை சீனாவுக்கு கடத்துவது தொடர்பான விசாரணைகளிலும், இவரது பெயரும் மெகாஸ்பீட் நிறுவனமும் சிக்கியுள்ளன. இருப்பினும், இவர் சீனாவுக்கு உளவு பார்த்தாரா என்பது குறித்து அமெரிக்கா தரப்பில் இன்னும் எந்த தகவல்களும் வெளியாகவில்லை. இதன் விளைவாகத்தான் ஜென்சன் ஹுவாங் பதவி விலகினார்.

மீண்டும் பதவியில் அமர்ந்தார்..!

இத்தனை சர்ச்சைகளுக்கு பிறகும், ஜென்சன் ஹுவாஙை மீண்டும் அதே பதவியில் நியமிக்க, அந்த நிறுவனத்தின் நிர்வாகக்குழு ஒரு மனதாக வாக்களித்ததால், என்விடியா நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து, “என்விடியா நிறுவனத்தை வழிநடத்த ஜென்சனே சரியான நபர் என்றும், அவரை மீண்டும் நியமிப்பது, பங்குதாரர்கள், ஊழியர்கள், பார்டர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நலனுக்கு உகந்தது என்றும் நிர்வாகக்குழு நம்புகிறது” என அதன் தலைவர் தெரிவித்திருந்தார். தொடர்ந்து அவரை அதே பதவியில் அமர்த்துவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்றும் நிர்வாகக்குழு நம்பிக்கை தெரிவித்திருப்பதாக குறிப்பிடப்படிருந்தது.

மேலும் படிக்க | “கல்யாணம் பண்ணிக்கலாமா..?” நாடாளுமன்றத்தில் காதலிக்கு ப்ரப்போஸ் செய்த அமைச்சர்!

ஜென்சன் ஹுவாங் கூறியது என்ன?

“ஒரு புதிய தொழில் புரட்சியின் தொடக்கத்தில், உலகின் மிக முக்கியமான தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான என்விடியாவிற்கு (NVIDIA) மீண்டும் திரும்பி வந்து, அதை வழிநடத்தும் வாய்ப்பைப் பெற்றதை நான் பெருமையாகக் கருதுகிறேன்,” என்று ஜென்சன் ஹுவாங் கூறினார். “இந்த பொறுப்பை மிகுந்த பணிவுடனும், புதிய அர்ப்பணிப்பு உணர்வுடனும் ஏற்றுக்கொள்கிறேன்.

என்விடியா வாரிய உறுப்பினர்கள் என் மீது நம்பிக்கை வைத்து, இந்த செயல்முறையின் போது ஆழமாகச் சிந்தித்ததற்கு அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, தலைவராகச் சிறப்பாகச் செயல்பட்ட ஹார்வி ஜோன்ஸிற்கும், இந்த காலகட்டத்தில் என்விடியாவை வழிநடத்திய கோலெட் கிரெஸ் மற்றும் எங்கள் நிர்வாகக் குழுவினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், எங்கள் பணியாளர்கள், பங்குதாரர்கள், தொழில் துறைத் தலைவர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள பங்காளிகள் வழங்கிய அளப்பரிய ஆதரவிற்கு நான் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, என் குடும்பத்தினர் எனக்கு வழங்கிய அன்புக்கும் ஆதரவிற்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். மீண்டும் பணியைத் தொடங்க நான் ஆவலாக உள்ளேன்” என தெரிவித்திருக்கிறார்.

ஏன் இந்த முடிவு மாற்றப்பட்டது..?

ஜென்சன் ஹுவாங், மீண்டும் சிஇஓவாக நியமிக்கப்பட வாய்ப்பே இல்லை என கடந்த வாரம் என்விடியா நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்திருந்த நிலையில், ஏன் இப்போது முடிவு மாற்றப்பட்டது..? எனும் கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது.

ஹுவாங் விலகிய பிறகு, நிறுவனத்தின் முதல் நிதி முடிவுகள் குறித்த அறிவிப்பில், நிறுவனத்தின் செயல்பாடுகள் வழக்கம்போல நடைப்பெற்று வருவதாகவும், இடைக்கால தலைமை செயல் அதிகாரி கோலெட் கிரேஸ் கூறியிருந்தார். எங்களால் இதை சமாளிக்க முடியும் என முதலீட்டாலர்களிடமும் அவர் தெரிவித்திருந்தார்.

ஹுவாங், சில நாட்களுக்கு முன்பாக தனக்கே நிறுவனத்தை வழிநடத்தும் வாய்ப்பு மீண்டும் கிடைத்தால் பெருமையாக இருக்கும் என தெரிவித்திருந்தார். இதையடுத்து, அப்போதும் நிறுவனம் அவரை மீண்டும் நியமிக்கும் எண்ணம் இல்லை என்பதை தெரிவித்திருந்தது.

தற்போது அவர் மீண்டும் அதே பதவியில் நியமிக்கப்பட்டதில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் தலையீடு இருக்குமோ எனும் கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.

என்விடியாவின் மதிப்பு பங்குசந்தையில் வீழ்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது. இது பேசுபொருளாக மாறிய நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த விவகாரத்தில் தலையிட்டிருக்கிறார்.  சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய ட்ரம்ப், ஜென்சன் ஹுவாங் இல்லாததால் நிறுவனத்திற்கு ஏற்பட்ட நஷ்டத்தை சுட்டிக்காட்டினார். அதோடு, அவரை மீண்டும் அதே பதவியில் நியமிக்க வேண்டும் என்பதற்காக, அந்த நிறுவனத்தின் நிர்வாகக்குழுவினரிடம் தாமே நேரடியாக பேசி அவர்களை சம்மதிக்க வைத்ததாக கூறியிருக்கிறார்.

இழந்ததை மீட்ட நிறுவனம்..!

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இந்த முயற்சியை அடுத்து, ஜென்சன் ஹுவாங் என்விடியா நிறுவனத்தின் சிஇஓ பதவிக்கு வந்துவிட்டார். அவர் பதவியேற்ற உடனேயே ஒரே நாளில் மட்டும் என்விடியா நிறுவனத்தின் பங்கின் மதிப்பு சுமார் 31.5 சதவீதம் அளவிற்கு அபரிமிதமான உயர்வை கண்டு, இழந்த சந்தை மதிப்பை மீண்டும் மீட்டெடுத்திருக்கிறது.

ஆலிஸ் ஹுவாங் எங்கே..?

ஜென்சன் ஹுவாங் தன் பதவிக்கு திரும்பியிருப்பதை அடுத்து, இந்த சர்ச்சை ஆரம்பிக்க காரணமாக இருந்த Alice எங்கே எனும் கேள்வியும் எழுந்துள்ளது. சிங்கப்பூர் நிறுவனமான மெகாஸ்பீட் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருக்கும் இவர், இன்னும் விசாரணை வட்டத்திற்குள்தான் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போதைய செய்திகளின்படி, அவர் பீஜிங்கிற்கு இடம் பெயர்ந்து விட்டதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | “குழந்தை பெத்துக்காேங்க..” இஸ்லாமியர்கள் அதிகரிப்பால் ட்ரம்ப் ஆதரவாளர் கொடுத்த ஐடியா..

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

ZEENEWS TRENDING STORIES