SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Explained : மழை இல்லாமல்... பெருவெள்ளம் வந்தது எப்படி? நேபாள பேரழிவு முழு பின்னணி

நேபாள பெருவெள்ளம் திடீரென ஏற்பட என்னவெல்லாம் காரணங்கள் இருக்கும்...? நேபாள பெருவெள்ளம் காரணமாக இந்தியாவின் பீகார், உத்தர பிரதேசத்தில் எச்சரிக்கை ஏன்...? உள்ளிட்டவை குறித்து விரிவாக இங்கு காணலாம்.

Written By Sudharsan G
Published: Aug 27, 2026, 01:05 PM IST | Updated: Aug 27, 2026, 01:19 PM IST
Join

நேபாள பெருவெள்ளம் பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பெருவெள்ளம் மிகப்பெரிய கட்டடங்களையும் நொடிப் பொழுதில் சரிந்துவிழும் காட்சிகள் இணையம் முழுவதும் தொடர்ந்து பதிவு வருகிறது. இவை அனைத்தும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன.

திபெத் - நேபாளம் எல்லையில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தால் ரசுவா, நுவாகோட், தாடிங் மற்றும் சிட்வான் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகள், குடியிருப்புகள், பாலங்கள், உள்கட்டமைப்புகள் அனைத்தும் தரைமட்டமாகி உள்ளது. மின்சார கட்டமைப்புகளும் அழிந்ததால் மின் வசதியும் முற்றிலும் தடைபட்டுள்ளன.

நாராயணி - கண்டக் ஆற்றுப் படுகை வழியாக வெள்ள நீர் மேலும் தெற்கு நோக்கி பாய்ந்து வருகிறது. பீகார் மற்றும் உத்தர பிரதேச மாநில அரசுகளும் ஆற்றில் நீர் அளவை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

நேபாளம் வெள்ளப்பெருக்கு: நடந்தது என்ன?

திபெத் - நேபாளம் எல்லை அருகே லெண்டே ஆற்றின் மேல் பகுதிகளில் இந்த திடீரென மண்ணும் பாறையும் சரிந்து பெரும் தடுப்பு ஏற்பட்டது. இதில் நீர் அதிகளவில் தேங்கியது. ஒருகட்டத்தில் தடுப்புகள் சரிந்ததும் பெருவெள்ளம் அப்படியே நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தைத் தாக்கியது.

அங்கிருந்து வெள்ளப்பெருக்கு கீழ்நோக்கி பாய்ந்தது. கனமழை பெரியளவுக்கு இல்லாதபோதிலும், இவ்வளவு பெரிய பேரிடர் ஏற்பட, லெண்டே ஆற்றின் மேல் பகுதியில் எவ்வளவு நீர் தேங்கியது என்பதை கண்டறியும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

மூன்று கருதுகோல்கள்

திபெத் - நேபாளம் பெருவெள்ளம் ஏற்பட்டதற்கான காரணங்கள் இன்னும் தெளிவாக தெரியவில்லை என்றும், மூன்று கருதுகோல்கள் முன்வைக்கப்படுகின்றன. 

இதுகுறித்து வானிலை ஆய்வாளர்கள், பேரிடர் மேலாண்மை அதிகாரிகள், திறந்த மூல உளவுத்துறை (OSINT) ஆய்வாளர்கள் அவற்றைச் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேங்கிய அணை உடைந்தது

நிலநடுக்கமும், நிலச்சரிவும்...

பனி ஏரி வெடிப்பு வெள்ளம்

இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - ஏன்?

நேபாளம் நாட்டின் தேவ்காட் நகரில், அதாவது இமயமலை அருகே திரிசூலி ஆறு, காளி கண்டகி ஆற்றுடன் இணைந்து, நாராயணி ஆற்றை உருவாக்குகிறது. இந்த நாராயணி ஆறு வால்மீகி நகரில் கண்டக் ஆறாக இந்தியாவின் பீகார் மாநிலத்திற்குள் வருகிறது.

நேபாளத்தில் 185 கி.மீ., தூரம் அளவுக்கு பாயும் இந்த கண்டக் ஆறு, இந்தியாவில் மட்டும் 445 கி.மீ., தூரம் அளவுக்கு பாய்கிறது.

வால்மீகி நகரில் உள்ள கண்டக் தடுப்பணையில், இன்று காலை 10 மணிநிலவரப்படி 1,04,400 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. மேல்நீர் மட்டும் 353.80 அடியாகவும், கீழ்நீர் மட்டம் 350.80 அடியாகவும் பதிவானது. கீழ்நீர் வெளியேற்றம் 1,04,400 கனஅடி ஆக பதிவாகி உள்ளது.

பீகார் நிலவரம்: மேற்கு சம்பாரன், கிழக்கு சம்பாரன், கோபால்கஞ்ச், சரண், முசாஃபர்பூர், வைஷாலி ஆகிய 6 மாவட்டங்களில் ஆற்றின் நீரின் அளவு அபாய மண்டலத்தில் இருப்பதாக மத்திய நீர் ஆணையம் அடையாளம் கண்டுள்ளது.

தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை பிரிவுகள் தற்போது பெட்டியோ, கோபால்கஞ்ச், முசாஃபர்பூர் ஆகிய இடங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

உத்தரபிரதேசம் நிலவரம்: மகாராஜ்கஞ்ச், குஷிநகர் மாவட்டங்களில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், அங்குள்ள அதிகாரிகளும் அவசரகால திட்டத்தைச் செயல்படுத்தி உள்ளனர்.

கோசி, பாக்மதி, காக்ரா போன்ற மற்ற தனி ஆறுகள் பாதிக்கப்படவில்லை. அதேநேரத்தில் ஹாஜிபூர் பகுதியில் கங்கை ஆற்றை நோக்கி பாயும் வெள்ளப்பெருக்கு காரணமாக கண்டக் நதிப் பாதைக்கு தொடர்ச்சியான கண்காணிக்கப்படுகிறது.

நேபாளம் பெருவெள்ளம்

நேபாளம் பெருவெள்ளம் உள்ளூர் நேரப்படி, நேற்று (ஆக. 26) காலை 9 மணிக்கு ஏற்பட்டது. 160 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 1000க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மாயமானோரில் 300க்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் ஆவர்.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES