)
ஜப்பானில் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட் இறுதி போட்டியில், இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி தங்கம் வென்று அசத்தி உள்ளது. அதேசமயம் இந்திய ஆண்கள் அணி ஜப்பான் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. (மேலும் படிக்க)
இறுதிக்கட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த 11 வயது சிறுமிக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. சிறுமியின் தாயார் தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கினார்... (மேலும் படிக்க)
தமிழகத்தின் சில முக்கிய பகுதிகளின் நாளை (செப்டம்பர் 23 - புதன்கிழமை) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. இதன் காரணமாக அப்பகுதிகளில் காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. (மேலும் படிக்க)
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), பல்வேறு 'தொழில்நுட்பம் சாராத பிரபலமான பிரிவுகள்' (Non-Technical Popular Categories - பட்டதாரி நிலை) சார்ந்த 3,477 பணியிடங்களுக்கான சுருக்கமான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது... (மேலும் படிக்க)
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில், வாக்குப்பதிவு நாளான அக்.06ம் தேதி பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மதுராந்தகம், தாராபுரம் பகுதிகளில் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. (மேலும் படிக்க)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ஜாகீர் கான் ஏற்க்கொண்டுள்ள நிலையில், அவருக்கு தோனி இரண்டு முக்கிய இலக்குகளை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. (மேலும் படிக்க)
ஆரோக்கியா பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்ந்து, லிட்டர் 86 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் தயிரின் விலையும் 90 ரூபாயாக உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. (மேலும் படிக்க)
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் முன்னிலையில், ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனத்திற்கும், தொழில்துறைக்குக் கீழ் இயங்கும் மாநில அரசின் ஒருங்கிணைப்பு முகமையான கைடன்ஸ் நிறுவனத்திற்கும் இடையே, தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது... (மேலும் படிக்க)
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர இடத்தைப் பெறுவதற்கான இந்தியாவின் முயற்சிக்கு ஸ்லோவாக்கியா திங்களன்று ஆதரவு தெரிவித்தது. 'குளோபல் சவுத்' (Global South) எனப்படும் வளரும் நாடுகளின் கூட்டமைப்பில் ஒரு முக்கிய நாடாகவும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் சக்தியாகவும் திகழும் இந்தியா, ஐக்கிய நாடுகள் சபையின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பில் இடம்பிடிக்கத் தகுதியானது என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜுராஜ் பிளானார் (Juraj Blanár) குறிப்பிட்டார். ஹங்கேரி, போலந்து, ஸ்லோவாக்கியா மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகள் தங்கள் ஆதரவை இந்தியாவுக்கு தெரிவித்துள்ளன... (மேலும் படிக்க)
வங்கக் கடலில் அர்னாப் புயல் உருவாகக் கூடும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். இந்த வருடத்தில் உருவாகும் முதல் புயலாக கருதப்படுகிறது. (மேலும் படிக்க)
தங்கம் விலை நேற்று சற்று குறைந்த நிலையில், இன்றும் சரிந்துள்ளது. நேற்று கிராமுக்கு ரூ. 15 மட்டுமே குறைந்து 22 கேரட் தங்கம் ரூ. 14,270க்கு விற்பனையானது. இந்த நிலையில், இன்று ரூ. 85 குறைந்து, ரூ. 14,185க்கு விற்பனையாகிறது.
இன்று (செப்டம்பர் 22 - செவ்வாய்கிழமை) புரட்டாசி 5 ஆம் நாள் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்கள் குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம். (மேலும் படிக்க)
பீகாரில் பிறந்து IIT Kanpur-ல் படித்து, ஜப்பானில் வேலை பார்த்த அபிஷேக் ஆனந்த், தனது கிரிக்கெட் ஆர்வத்தால் அந்நாட்டின் தேசிய அணியில் இடம்பிடித்துள்ள சுவாரஸ்ய பயணம் குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம். (மேலும் படிக்க)
தமிழகத்தில் காலை உணவுத்திட்டம் இன்று முதல் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு, கூடுதலாக 15.30 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெற உள்ளனர். (மேலும் படிக்க)
நடுநிலை பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று விரிவாக்கம் செய்துள்ளார். அமைச்சரவை மாற்றம் குறித்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று இந்தியா - இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையே இறுதி போட்டி நடைபெற இருக்கிறது. அதேபோல் இந்தியா - ஜப்பான் ஆண்கள் அணிகளுக்கு இடையேயான போட்டியும் நடைபெற இருக்கிறது. வங்கக்கடலில் புயல் உருவாக இருக்கிறது என்றும் இதனால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார்.