• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Live Blog
  • /தமிழகம்
  • /Tamil News LIVE: அன்பில் மகேஷ் வீட்டில் சோதனை.. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்!
Live Now

Tamil News LIVE: அன்பில் மகேஷ் வீட்டில் சோதனை.. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்!

முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் சோதனை. இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள். இது போன்ற முக்கிய செய்திகளை தெரிந்துக்கொள்ள ஜீ தமிழ் நியூஸுடன் இணைந்திருங்கள்!

Written ByR Balaji
Published: Sep 16, 2026, 10:01 AM IST|Updated: Sep 16, 2026, 04:14 PM IST
joinshare
Tamil News LIVE: அன்பில் மகேஷ் வீட்டில் சோதனை.. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்!
16 Sep 2026 14:40 IST (IST)
share

India Pakistan Naval Collision : அரபிக்கடலில் இந்தியா–பாகிஸ்தான் கப்பல்கள் மோதியது எப்படி?

சர்வதேச கடற்பரப்பில் இந்திய கடற்படைக் கப்பலுடன் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரிய சேதம் ஏற்படவில்லை என்றாலும், பாகிஸ்தான் கடற்படையின் செயல்பாடு தொழில்முறையற்றது எனக் கண்டித்த இந்தியா, அந்நாட்டின் பொறுப்பு தூதரை அழைத்து கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. 1991 ஒப்பந்தம் மீறப்பட்டதா? சம்பவத்தின் முழு விவரம் இதோ... (மேலும் படிக்க)
 

16 Sep 2026 14:25 IST (IST)

செப். 22 வரை கனமழை எச்சரிக்கை..

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் நாட்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)
 

16 Sep 2026 14:01 IST (IST)

Tamil News LIVE: மதுரைக்கு சிறப்பு ரயில்கள்

மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கூடுதல் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நெல்லை - கூடல் நகர், ராமேஸ்வரம் - பழனி, பழனி - ராமேஸ்வரம், போடிநாயக்கனூர் - கூடல் நகர், கூடல் நகர் - போடிநாயக்கனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)
 

16 Sep 2026 13:25 IST (IST)

”விஜய் சேதுபதிக்கு நேரம் சரியில்லை”

விஜய் சேதுபதிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜாக்பாட் அடிக்கும் என தான் கூறியதாகவும், தற்போது அவருக்கு நேரம் சரியில்லை எனவும் கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார். 

16 Sep 2026 13:05 IST (IST)

Puducherry News: ஒரே இடைத்தேர்தல், பல வேட்பாளர்கள்: புதுச்சேரி அரசியலில் பரபரப்பு

காங்கிரஸ் வேட்பாளராக இ. விநாயகம், CPI வேட்பாளராக ஏ. எம். சலீம், AINRC சார்பில் அசோக் ஆனந்த், திமுக சார்பில் சேது செல்வம் என தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. TVK ஆதரவு யாருக்கு? அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறும் தேர்தலின் முழு விவரங்கள்.. (மேலும் படிக்க)

16 Sep 2026 11:39 IST (IST)

Tamil News LIVE: கல்வி உதவித்தொகை அதிரடி உயர்வு

15 ஆண்டுகளுக்கு பிறகு ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை தமிழக அரசு உயர்த்தி உள்ளது. மேலும், உதவித்தொகையினை பெறுவதற்கு புதிதாக 11 இளங்கலை படிப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)

16 Sep 2026 11:18 IST (IST)

அன்பில் மகேஷ் வீட்டில் சோதனை!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் பல்வேறு அனுமதிகள் வழங்கப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகாரின் தொடர்ச்சியாக, முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் திருச்சி இல்லாத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 
 

16 Sep 2026 10:35 IST (IST)

Tamil News LIVE: காலை உணவுத் திட்டம்

காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் லண்டனில் இருக்கும் நிலையில், இத்திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)
 

16 Sep 2026 10:04 IST (IST)

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

நாளை (செப்டம்பர் 17) முதல் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேக விழாவையொட்டி, நாளை அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)

16 Sep 2026 10:04 IST (IST)

Tamil News LIVE: ஸ்டாலின் உடல்நிலை குறித்த அப்டேட்

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலினின் உடல்நிலை குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார். மருத்துவர்களின் அறிவுரைப்படி, இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வீட்டிலேயே ஓய்வெடுக்க உள்ளேன் என கூறினார். (மேலும் படிக்க)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

2

பிரதமர் மோடி சென்னை விசிட்... CM விஜய் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

3

பட்டா மாற்றம் முதல் சான்றிதழ்கள் வரை: விஏஓ அலுவலகத்திலேயே கிடைக்கும் வசதிகள் முழு விவரம்!

4

கோவை டூ நெல்லை.. பிச்சு உதறப்போகும் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை

5

RR அணியில் இருந்து வெளியேறும் ஜெய்ஸ்வால்? இந்த அணிக்குதான் செல்கிறாராம்.. முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வைரல் காய்ச்சல் என்று அவரே விளக்கம் கொடுத்துள்ளார். மேலும், மூன்று நாட்கள் ஓய்வெடுக்க உள்ளதாகவும் கூறி உள்ளார். மதூராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வந்த நிலையில், இன்று கிராமுக்கு ரூ. 25 உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ. 14065க்கு விற்பனை செய்யப்படுகிறது.