• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Live Blog
  • /தமிழகம்
  • /Tamil News LIVE : மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு; நாடு திரும்பிய CM விஜய்
Live Now

Tamil News LIVE : மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு; நாடு திரும்பிய CM விஜய்

Tamil News LIVE Updates: மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு நடைபெறுகிறது; தந்தை பெரியார் 148வது பிறந்தநாள்; இங்கிலாந்து பயணத்தை நிறைவு செய்து முதலமைச்சர் விஜய் இன்று சென்னை திரும்புகிறார் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் உடனடி அப்டேட்ஸ் இதோ

Written BySudharsan G
Published: Sep 17, 2026, 07:16 AM IST|Updated: Sep 17, 2026, 05:00 PM IST
joinshare
Tamil News LIVE : மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு; நாடு திரும்பிய CM விஜய்
Image Credit: Madurai Meenakshi Amman Kovil Kudamuzhukku | Screen Grab : Youtube/@TNHRCEdepartment
17 Sep 2026 16:46 IST (IST)
share

BRICS Summit 2026

புது தில்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட பிறகு உலகத் தலைவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்களா?. சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்தத் தகவலை, இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் உடனடியாகவும் உறுதியாகவும் மறுத்தது மட்டுமல்லாமல் இதனை "போலித் தகவல்" (Fake Alert) என்று கூறியுள்ளது... (மேலும் படிக்க)

17 Sep 2026 15:50 IST (IST)

ஜவஹர் நவோதயா வித்யாலயா

ஜவஹர் நவோதயா வித்யாலயாக்களை அமைப்பதற்குத் தெரிவித்துள்ள எதிர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக அரசிடம் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமையன்று கேட்டுக்கொண்டது... (மேலும் படிக்க)

17 Sep 2026 13:48 IST (IST)

Tamil News Live : அடுத்தாண்டு எய்ம்ஸ் மருத்துவமனை

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் வரும் 2027 முதல் புறநோயாளிகள் பிரிவு செயல்பாட்டுக்கு வரும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில், வரும் 2027 ஜனவரி 1 முதல் புறநோயாளிகள் பிரிவு செயல்பாட்டுக்கு வரும் என ஒன்றிய அரசு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், கடந்த ஆகஸ்ட் 31 வரையில் ஒட்டுமொத்தமாக 57% பணிகள் நிறைவடைந்துள்ளதாக தகவல்.

17 Sep 2026 12:57 IST (IST)

Tamil News Live : அமெரிக்கா ரஷ்யா மீதான தடை சட்டம் - இந்தியாவின் நிலைப்பாடு?

ரஷ்யா உடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா மசோதா நிறைவேற்றியுள்ள நிலையில், இந்தியாவின் வர்த்தகம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பை உறுதிசெய்வோம் என மத்திய அரசு திட்டவட்டம் (மேலும் படிக்க)

Our statement on passage of the Sanctioning Russia and Iran Act in the US Congress

🔗 https://t.co/kD0Yg9sWbU pic.twitter.com/rSc21AqwEh

— Randhir Jaiswal (@MEAIndia) September 17, 2026

17 Sep 2026 12:36 IST (IST)

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு கீழ் குறிப்பிட்டுள்ள விவரப்படி தொகுப்பூதிய அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக முறையில் ஆட்சேர்ப்பு நடக்கவுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.... (மேலும் படிக்க)

17 Sep 2026 12:14 IST (IST)

Tamil News Live : ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா ஏன் இல்லை...?

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஓடிஐ ஸ்குவாடில் ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் ஆகியோர் சேர்க்கப்படாததன் காரணங்கள் (மேலும் படிக்க)

17 Sep 2026 10:45 IST (IST)

Tamil News LIVE : சுதர்சன நாச்சியப்பன் காலமானார்

மத்திய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சுதர்சன நாச்சியப்பன் காலமனார். உடல்நலக்குறைவால் சிவகங்கையில் சுதர்சன நாந்ச்சியப்பன் காலமானார். (மேலும் படிக்க)

17 Sep 2026 10:17 IST (IST)

பிரதமர் மோடியின் பிறந்தநாள்

பிரதமர் மோடியின் அன்றாட நடைமுறைகள், அவரைச் செதுக்கிய தாக்கங்கள் மற்றும் அவரது ஆர்வங்கள் ஆகியவை, பொதுவெளியில் அறியப்படும் அந்த ஆளுமைக்குப் பின்னாலுள்ள மனிதரை வடிவமைத்த பழக்கவழக்கங்கள் குறித்த ஒரு பார்வையை நமக்கு அளிக்கின்றன... (மேலும் படிக்க)

17 Sep 2026 09:59 IST (IST)

Tamil News LIVE : அஞ்சல் துறை வேலைவாய்ப்பு

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2,095 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி வாய்ப்புள்ளது. எனவே, 10ம் வகுப்பு படித்தவர்கள் உடனே விண்ணப்பிக்க வேண்டும். (மேலும் படிக்க)

17 Sep 2026 09:12 IST (IST)

EPFO ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்

தற்போதைய விதிகளின்படி, EDLI திட்டமானது தகுதியுள்ள பயனர்களுக்கு அதிகபட்சமாக ₹7 லட்சம் வரையிலான பலனை வழங்குகிறது. ஊதிய வரம்பு ₹25,000-ஆக உயர்த்தப்பட்டால், மொத்த பலன் ₹10.5 லட்சமாக அதிகரிக்கும்... (மேலும் படிக்க)

17 Sep 2026 09:04 IST (IST)

Tamil News Live : பிரதமர் மோடியின் பிறந்தநாள் - திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து

பிரதமர் மோடியின் 76வது பிறந்தநாளுக்கு முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் வாழ்த்து.

Warm birthday greetings to Hon’ble Prime Minister Thiru. @NarendraModi avl.

Wishing him good health, happiness and a long life.

— M.K.Stalin (@mkstalin) September 17, 2026

17 Sep 2026 09:01 IST (IST)

Tamil News Live : பெரியார் 148வது பிறந்தநாள் - முதலமைச்சர் விஜய் X பதிவு

சுயமரியாதையும், சமூகநீதியும், பகுத்தறிவும் நிறைந்த முற்போக்குச் சிந்தனைகளை மக்கள் மனங்களில் விதைத்து, சாதி, மத வேறுபாடுகளைக் களைந்திடவும், மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும் தம் வாழ்நாள் முழுவதும் போராடிய தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளில், அவரது புரட்சிகரமான சிந்தனைகளையும்,… pic.twitter.com/jsUQk2H0ib

— CMOTamilNadu (@CMOTamilnadu) September 17, 2026

17 Sep 2026 08:34 IST (IST)

Tamil News Live : சென்னை திரும்பினார் CM விஜய்

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் விஜய் சென்னை திரும்பினார். இந்தச் சுற்றுப்பயணத்தில் ரூ.15,300 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாகவும், இதனால் 10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் ஏற்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. முதலமைச்சரின் இங்கிலாந்து பயணம் வெற்றிப் பயணமாக அமைந்ததாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

17 Sep 2026 08:04 IST (IST)

Tamil News Live : பெரியார் 148வது பிறந்தநாள் - கனிமொழி எம்.பி. பதிவு

பெரியாரைப் படிப்போம்; அவர் விதைத்த சிந்தனைகளை உலகெங்கும் விதைப்போம்; நாளைய உலகை பகுத்தறிவும் சமத்துவமும் நிறைந்த உலகாகப் படைப்போம்!#SocialJusticeDay #PeriyarForever pic.twitter.com/xe6vKHsCxl

— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) September 17, 2026

17 Sep 2026 07:40 IST (IST)

Tamil News Live : நிறைவடைந்தது குடமுழுக்கு

மதுரை மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அனைத்து விமானங்களுக்கும் சம காலத்தில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றது.

17 Sep 2026 07:31 IST (IST)

Tamil News Live : மீனாட்சியம்மன் குடமுழுக்கு - சு. வெங்கடேசன் எம்.பி., பதிவு

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் குடமுழுக்கு தொடர்பாக மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் X பதிவு

ஓதுவார்களின் சைவத்தமிழ் கோபுரமெங்கும் முழங்க, தவத்திரு குன்றக்குடி அடிகளாரோடு திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டு விழாவில்..."#MeenakshiSundareswarar #MaduraiTemple #Kumbabishekam pic.twitter.com/Leo4pH7Z9u

— Su Venkatesan MP (@SuVe4Madurai) September 17, 2026

17 Sep 2026 07:22 IST (IST)

Tamil News Live : பெரியார் 148வது பிறந்தநாள் - திமுக தலைவர் ஸ்டாலின் பதிவு

பெரியார் 148வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவரது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழர் தலைமுறை தலைநிமிரப் பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்குப் புரட்சி வணக்கம்!

பல தலைமுறைகள் ஆதிக்கத்துக்குப் பணிந்தன.

ஒரு தலைமுறை பெரியார் நிகழ்த்திய புரட்சியைக் கண்டது.

பல தலைமுறைகள் அதன் மாற்றத்தைக் காண்கின்றன.

ஆனாலும், ஆதிக்கம் இன்னும் முற்றாக அகலவில்லை.… pic.twitter.com/K0vRSuzqmB

— M.K.Stalin (@mkstalin) September 17, 2026

17 Sep 2026 07:20 IST (IST)

Tamil News Live : மதுரை குடமுழுக்கு விழா - CM விஜய் பதிவு

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் X பதிவு

தமிழர்களின் ஆன்மிகம், கலை, பண்பாடு, கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையின் பெருமைகளை நூற்றாண்டுகளைக் கடந்து பறைசாற்றி நிற்கும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்புடன் நடைபெறுவதில் பெருமகிழ்ச்சி…

— CMOTamilNadu (@CMOTamilnadu) September 16, 2026

17 Sep 2026 07:18 IST (IST)

Tamil News Live : மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு - நேரலை பார்க்க...

மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை நேரலையில் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ யூ-ட்யூப் நேரலை சுட்டியை கிளிக் செய்யவும்.

 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு: 17 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. குடமுழுக்கை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. இரவு மீனாட்சி சுந்தரேஸ்வரர் சித்திரை வீதிகளில் உலா வருவார்கள்.

பெரியார் 148வது பிறந்தநாள்: பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 148வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பேரணிகள், பொதுக்கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சென்னை திரும்பும் CM விஜய்: கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி முதலீடுகளை ஈர்ப்பது உள்ளிட்ட பல பணிகளுக்காக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், இன்று சென்னை திரும்ப உள்ளார்.