• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Live Blog
  • /தமிழகம்
  • /Tamil News LIVE : சென்னையில் விநாயகர் ஊர்வலம்; 13 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்
Live Now

Tamil News LIVE : சென்னையில் விநாயகர் ஊர்வலம்; 13 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்

Tamil News LIVE Updates: சென்னையில் இன்று விநாயகர் சிலை ஊர்வலம், வங்கக் கடலில் உருவாகும் ஆழந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் உடனடி அப்டேட்ஸை இங்கு காணலாம்.

Written BySudharsan G
Published: Sep 20, 2026, 09:38 AM IST|Updated: Sep 20, 2026, 04:41 PM IST
joinshare
Tamil News LIVE : சென்னையில் விநாயகர் ஊர்வலம்; 13 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்
Image Credit: Chennai Vinayagar Idol Procession | Image Source : X
20 Sep 2026 16:35 IST (IST)
share

டிஎன்பிஎஸ்சி மகிழ்ச்சி செய்தி

TNPSC Recruitment : நகர்ப்புற உள்ளாட்சிப் பணியிடங்கள் இனி டிஎன்பிஎஸ்சி மூலமே நிரப்பப்படும் என்ற சட்டத்திருத்தத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததையடுத்து, தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது. (மேலும் படிக்க)

20 Sep 2026 15:56 IST (IST)

சொந்த வீடு வாங்க அருமையான வாய்ப்பு: தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளுக்கு இணையவழியில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. (மேலும் படிக்க)

20 Sep 2026 14:26 IST (IST)

Tamil News Live : தமிழ்நாடு அரசின் நிதி நிலை

தமிழ்நாடு அரசின் 2026-27 நிதியாண்டின் முதல் 5 மாத வருவாய், செலவு, கடன் விவரங்கள் வெளியீடு. வருவாய் ரூ.1.17 லட்சம் கோடியாக உள்ள நிலையில், பற்றாக்குறை மற்றும் கடன் நிலவரம் (மேலும் படிக்க)

20 Sep 2026 14:25 IST (IST)

டாஸ்மாக் பணியாளர்களுக்கு மெகா குட் நியூஸ்

TASMAC latest announcement : டாஸ்மாக் பணியாளர்களுக்குப் பண்டிகை முன்பணமாக 20 ஆயிரம் ரூபாய் வரை பெற்றுக் கொள்ளலாம் என நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு. (மேலும் படிக்க)
 

20 Sep 2026 14:24 IST (IST)

Madurai Crime News : ஒரே நாளில் 3 கொலைகள்

மதுரையில் ஒரே நாளில் பெண் உள்பட மூன்று பேர் அடுத்தடுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெங்குடி, மேலூர், ஜெய்ஹிந்த்புரம் சம்பவங்கள் குறித்த முழு விவரம் இதோ

20 Sep 2026 11:08 IST (IST)

Asian Games 2026 Live : இந்தியாவுக்கு முதல் பதக்கம்

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டித்தொடரில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. 10 மீட்டர் ஏர் ரைஃப்பிள் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றது இந்திய மகளிர் அணி.

இளவேனில் வாலறிவன், சோனம் மஸ்கார், விதர்சா வினோத் ஆகியோர் தனிப் பிரிவிலும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றனர்.

20 Sep 2026 09:48 IST (IST)

Tamil News Live : 13 மாவட்டங்களில் மழைக்கு அப்டேட்

நீலகிரி, கோவை, வேலூர், திருவண்ணாமலை, மதுரை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

20 Sep 2026 09:44 IST (IST)

Tamil News Live : மானிய எல்பிஜி பெற ஆதார் அங்கீகாரம் கட்டாயம்

வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டரை பெறுவதற்கு ஆதார் கட்டாயம் (மேலும் படிக்க)

20 Sep 2026 09:42 IST (IST)

Tamil News Live : ஐஐடி பாம்பே மாணவர் மரணம் - Explained

மும்பை ஐஐடி மாணவர் சாஹில் வகோடே தற்கொலை வழக்கில் பேராசிரியர் மீது வழக்குப்பதிவு. சாதி ரீதியான கொடுமை மற்றும் நிர்வாக அச்சுறுத்தலே காரணம் என பெற்றோர் புகார், மாணவர்கள் போராட்டம் (மேலும் படிக்க)

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

விநாயகர் சிலைகள் கரைப்பு: விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பொது இடங்களில் 1,562 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. அந்த வகையில், பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய இடங்களில் இன்று சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும் என்பதால் 16,500 காவல்துறையினர்; 2,000 ஊர்க்காவல் படையினர் சென்னை முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

டெங்கு வார்டு: சென்னையில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் டெங்கு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. 28 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வானிலை: வங்கக் கடலின் வடக்கு அந்தமான் அருகே புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இன்று ஆழந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.