• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Live Blog
  • /தமிழகம்
  • /Tamil News Live: விநாயகர் சதுர்த்தி.. சென்னை திரும்ப சிறப்பு பேருந்துகள்.. ஆசிய கோப்பை வெற்றி!
Live Now

Tamil News Live: விநாயகர் சதுர்த்தி.. சென்னை திரும்ப சிறப்பு பேருந்துகள்.. ஆசிய கோப்பை வெற்றி!

Tamil News Live Updates: இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்ப 4 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கம். இது போன்ற இன்றைய தமிழ்நாடு முக்கிய செய்திகளை தெரிந்துக்கொள்ள ஜீ தமிழ் நியூஸுடன் இணைந்திருங்கள்!

Written ByR Balaji
Published: Sep 14, 2026, 09:35 AM IST|Updated: Sep 14, 2026, 02:54 PM IST
joinshare
Tamil News Live: விநாயகர் சதுர்த்தி.. சென்னை திரும்ப சிறப்பு பேருந்துகள்.. ஆசிய கோப்பை வெற்றி!
14 Sep 2026 14:32 IST (IST)
share

Bank News: ரெப்போ ரேட் உயருமா?

பண்டிகை காலத்தில் வீடு அல்லது கார் வாங்கப் போகிறீர்களா? RBI ரெப்போ ரேட் உயர்த்தப்பட்டால் Floating Rate Loan EMI அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. SBI ஆய்வு அறிக்கை கூறுவது என்ன? முழு விவரம் இதோ.. (மேலும் படிக்க)

14 Sep 2026 14:25 IST (IST)

Tamil News Live: சென்னையில் நாளை மின்தடை

சென்னையில் நாளை (செப்டம்பர் 15) பல்வேறு இடங்களில் மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே, இதற்கு ஏற்ப மக்கள் தங்கள் பணிகளை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. (மேலும் படிக்க)
 

14 Sep 2026 14:04 IST (IST)

Tamil News Live : செப். 17இல் மதுரை மாட்டுத்தாவணி சந்தையும் லீவ்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, அன்றைய தினம் மாட்டுத்தாவணி மொத்த காய்கறி விற்பனை சந்தைக்கும் விடுமுறை அறிவிப்பு (மேலும் படிக்க)

14 Sep 2026 13:11 IST (IST)

டெல்லியில் வீடு மற்றும் வணிகக் கட்டடங்கள் கட்ட புதிய விதிகள்

டெல்லியில் வீடு அல்லது வணிகக் கட்டடம் கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? மாஸ்டர் பிளான் டெல்லி, எஃப்.ஏ.ஆர் (FAR), தரை வரம்பு மற்றும் பார்க்கிங் விதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிந்துக்கொள்ள.. (மேலும் படிக்க)

14 Sep 2026 12:39 IST (IST)

Tamil News Live: காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற் பயிற்சி நிலையத்தில் அலுவலக பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு 8ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)

14 Sep 2026 12:17 IST (IST)

தமிழ்நாடு மின்தடை!

தமிழகத்தின் சில முக்கிய பகுதிகளில் நாளை (செப்டம்பர் 15 - செவ்வாய்கிழமை) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. அதன் காரணமாக அப்பகுதிகளில் காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.  (மேலும் படிக்க)
 

14 Sep 2026 11:24 IST (IST)

2 ரயில் சேவைகளில் மாற்றம் - தெற்கு ரயில்வே!

செப்டம்பர் 15, 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக பாலக்காடு–திருச்சி மற்றும் கோவை–நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. (மேலும் படிக்க)
 

14 Sep 2026 10:41 IST (IST)

Tamil News Live: தமிழக அரசின் கல்வி உதவித்தொகை

IIT, IIM,IIIT, NIT மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் 2026-27ஆம் கல்வியாண்டிற்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். (மேலும் படிக்க)

14 Sep 2026 10:40 IST (IST)

Tamil News Live: சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தொடர்ந்து மூன்று நாட்கள் விநாயகர் சதுர்த்தி விடுமுறை முடிந்து, ஊருக்கு திரும்பும் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)
 

14 Sep 2026 10:38 IST (IST)

விநாயகர் சதுர்த்தி - முதல்வர் விஜய் வாழ்த்து!

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடி வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான பதிவில், விநாயகர் சதுர்த்தி திருநாளில், அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்திருநாளில் தொடங்கும் அனைத்து நற்செயல்களும் விநாயகப் பெருமானின் அருளால் இனிதே நிறைவேறி, புதிய நம்பிக்கைகள் மலர்ந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பெருகட்டும்! மக்களின் எண்ணங்கள் ஈடேறி, அனைத்து முயற்சிகளும் வெற்றியின் பாதையில் பயணிக்கட்டும்!

14 Sep 2026 09:37 IST (IST)

ஆசிய கோப்பை சர்ச்சை

2025 ஆடவர் ஆசிய கோப்பையை தொடர்ந்து, 2026 மகளிர் ஆசிய கோப்பையிலும் மொஹ்சின் நக்வியிடம் இருந்து இந்திய அணி கோப்பையை பெறாதது, மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. (மேலும் படிக்க)
 

14 Sep 2026 09:36 IST (IST)

தமிழகம் முழுவதும் 1 லட்சம் சிலைகள்..

விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் சிலைகள் நிறுவப்பட்டுள்ள நிலையில், சென்னையில் 18,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். (மேலும் படிக்க)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. தமிழகம் முழுவதும் 1 லட்சம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 18 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர் விடுமுறையை முடித்து சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்ப 4 ஆயிரத்து 95 சிறப்பு பேருந்துக்கள் இயக்கப்பட உள்ளன. அதேபோல், நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயிலும் இயக்கப்பட உள்ளது. தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இலங்கை அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி 8 வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஆனால் கோப்பையை ஆசிய கவுன்சில் தலைவர் நக்வியிடம் வாங்காதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.