• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /மதுரை
  • / மதுரை மக்களுக்கு குட் நியூஸ்! செப்டம்பர் 17 உள்ளூர் விடுமுறை

மதுரை மக்களுக்கு குட் நியூஸ்! செப்டம்பர் 17 உள்ளூர் விடுமுறை

Madurai News : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி செப்டம்பர் 17 உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written ByKarthikeyan Sekar
Published: Sep 13, 2026, 06:44 AM IST|Updated: Sep 13, 2026, 06:51 AM IST
joinshare
 மதுரை மக்களுக்கு குட் நியூஸ்! செப்டம்பர் 17 உள்ளூர் விடுமுறை
Image Credit: Madurai Holiday

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Madurai News : உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, வரும் செப்டம்பர் 17 வியாழக்கிழமை அன்று மதுரை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மீனாட்சி அம்மன் திருக்கோவில்

மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மகா கும்பாபிஷேகப் பெருவிழாவைக் காணவும், சுவாமி தரிசனம் செய்யவும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பக்தர்களின் வசதிக்காகவும் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் தமிழக அரசுக்குக் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.

உள்ளூர் விடுமுறை

மாவட்ட ஆட்சியரின் கோரிக்கையினை ஏற்று, கும்பாபிஷேகம் நடைபெறும் செப்டம்பர் 17 அன்று மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க அனுமதி வழங்கி அரசுச் செயலாளர் எ. சுந்தரவல்லி அரசாணை பிறப்பித்துள்ளார். பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் தேர்வுகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் இந்த விடுமுறை பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு வரும் செப்டம்பர் 26, 2026 (சனிக்கிழமை) அன்று முழு வேலைநாளாகச் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு

இந்த உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறிச் சட்டம், 1881-ன் (Negotiable Instruments Act, 1881) கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள மாவட்டக் கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களுடன் வழக்கம் போல் செயல்படத் தகுந்த ஏற்பாடுகளைச் செய்யுமாறு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu