• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /மதுரை
  • /மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு: தரிசன நேரம், பார்க்கிங், நேரலை - பக்தர்களுக்கான முழு விவரம் இதோ

மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு: தரிசன நேரம், பார்க்கிங், நேரலை - பக்தர்களுக்கான முழு விவரம் இதோ

Madurai Meenakshi Amman Kudamuzhukku: மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழா நாளை (செப். 17) நடைபெற உள்ளது. குடமுழுக்கின் முக்கிய நிகழ்வுகளின் நேர அட்டவணை, அனுமதி அட்டை உள்ளவர்களுக்கான அறிவுறுத்தல்கள், பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்கள், நேரலை வசதி, மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடுகள் உள்ளிட்ட அனைத்தையும் இங்கு விரிவாக காணலாம்.

Written BySudharsan G
Published: Sep 16, 2026, 08:38 PM IST|Updated: Sep 16, 2026, 08:57 PM IST
joinshare
மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு: தரிசன நேரம், பார்க்கிங், நேரலை - பக்தர்களுக்கான முழு விவரம் இதோ
Image Credit: Madurai Meenakshi Amman Kovil | AI Generated Image : ChatGPT

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Madurai Meenakshi Amman Sundareswarar Kudamuzhukku: புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் குடமுழுக்கு விழா 17 ஆண்டுகளுக்கு பிறகு நாளை (செப்.17) நடைபெற இருக்கிறது. மதுரையில் சாதாரண விடுமுறை நாட்களிலேயே மக்கள் கூட்டம் அதிக இருக்கும், குடமுழுக்கு விழா முன்னிட்டு உலகம் முழுவதும் இருந்தும் பக்தர்கள் மதுரை மாநகரில் குவிந்துள்ளனர்.

மதுரை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், வங்கிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது. இதற்கு பதிலாக வரும் செப்.26ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக கருதப்படும் என உள்ளூர் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தச் சூழலில், மதுரை மீனாட்சி அம்மன் குடமுழுக்கு குறித்த முழு விவரங்களையும் இங்கு காணலாம்.

மேலும் படிக்க | மதுரை மக்களே... இந்த 4 நாட்களில்... மீனாட்சியம்மன் கோவில் கட்டண தரிசனம் ரத்து

முக்கிய நிகழ்வுகள் - நேர அட்டவணை இதோ

அதிகாலை 4 மணி மகா பூரணஹூதி மற்றும் கடம்புறப்பாடு
காலை 7.40 - காலை 8.10மகா குடமுழுக்கு
காலை 8.30 - காலை 10மூலவர் உள்ளிட்ட பரிவரா மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம். சிறப்பு அலங்காரம் நடைபெறும். தீப, தூபங்கள் காண்பிக்கப்படும்.
இரவு 7 மணிநான்கு மாசி வீதிகளில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் வீதி உலா

நாளை (17-09-2026) நடைபெற உள்ள உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் 
குடமுழுக்கு பெருவிழாவிற்கு
பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

— TN HRCE (@tnhrcedept) September 16, 2026

அனுமதி அட்டை பெறுபவர்கள் செல்லும் வழிகள்

பழுப்பு நிற (Brown) அனுமதி அட்டை: வடக்கு சித்திரை வீதியில் கிழக்கு பகுதியில் இருந்து வடக்கு கோபுரம் வழியாக சுவாமி சன்னதி கிழக்குப் பகுதி மேல்தளம் செல்ல வேண்டும்.

இளம் சிவப்பு (Pink) அனுமதி அட்டை: கிழக்கு சித்திரை வீதியில் தெற்கு பகுதியில் இருந்து அஷ்டசக்தி மண்டபம் வழியாக மீனாட்சி நாயக்கர் மண்டபம் மேல் தளத்திற்கு செல்ல வேண்டும்.

ஊதா நிற (Purple) அனுமதி அட்டை: தெற்கு சித்திரை வீதியில் மேற்கு பகுதியில் இருந்து தெற்கு கோபுரம் வழியாக பொற் தாமரை குளம் பகுதி மேல் தளத்திற்கு செல்ல வேண்டும்.

கரும் நீலம் (Dark Blue) நிற அனுமதி அட்டை: கிழக்கு சித்திரை வீதியில் வடக்கு பகுதியில் இருந்து கிழக்கு ராஜ கோபுரம் வழியாக ஆயிரம் கால் மண்டபம் மேல் தளத்திற்கு செல்ல வேண்டும்.

பச்சை நிற (Green) அனுமதி அட்டை: கிழக்கு சித்திரை வீதியில் வடக்கு பகுதியில் இருந்து அஷ்டசக்தி மண்டபம் வழியாகவும் மீனாட்சி அம்மன் தங்க விமான இடத்திற்கு செல்ல வேண்டும்.

மஞ்சள் நிற (Yellow) அனுமதி அட்டை: வடக்கு சித்திரை வீதியில் மேற்கு பகுதியில் (முனீசுவரர் சன்னதி) இருந்து வடக்கு கோபுரம் வழியாக சுந்தரேசுவரர் தங்கம் விமானம் செல்ல வேண்டும்.

சிவப்பு நிற (Red) அனுமதி அட்டை: மேற்கு சித்திரை வீதியில் வடக்கு பகுதியில் இருந்து மேற்கு கோபுரம் வழியாக சுவாமி சன்னதி மேற்கு பகுதி மேல் தளத்திற்கு செல்ல வேண்டும்.

மஞ்சள் நிற பேட்ஜ் (Yellow Badge) உள்ளவர்கள்: கிழக்கு சித்திரை வீதியில் வடக்கு பகுதியில் இருந்து அஷ்டசக்தி மண்டபம் வழியாக செல்ல வேண்டும்.

மேலும் படிக்க | மதுரை மக்கள் கவனத்திற்கு... எக்கச்சக்க போக்குவரத்து மாற்றம் - பாத்து வெளியே போங்க

பக்தர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

  • குடமுழுக்கு விழாவின்போது பக்தர்கள் நான்கு ஆவணி மூல வீதிகள் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
  • குடமுழுக்கு அனுமதி அட்டை அல்லது பேட்ஜ் இல்லாத நபர்களுக்கு காலை 10 மணிவரை சித்திரை வீதிகளில் நுழையவோ, அங்கு நிற்கவோ அனுமதி இல்லை.
  • குடமுழுக்கு விழாவை காண கோவிலுக்கு அருகில் இருந்து பெரிய கட்டடங்களின் மாடியில் நின்று கூட்டம் கூட்டமாக நிற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வீதியை மீறி குடமுழுக்கை காண அதிக கூட்டத்தை மாடியில் கூட்டினால் கட்டடத்தின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
  • காலை 10 மணிக்கு மேல் பொது தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும். அப்போது மேற்கு கோபுரம் மற்றும் தெற்கு கோபுரம் வழியாக கோவிலுக்குச் செல்ல வேண்டும்.
  • தரிசனம் முடித்து கிழக்கு ராஜகோபுரம் வழியாக வெளியேற வேண்டும். 
  • வரும் செப். 20ஆம் தேதிவரை கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அனைவரும் பொது தரிசனத்தில்தான் சாமி தரிசனம் மேற்கொள்ள வேண்டும்.

அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா 2026
தரிசன நேரம் மற்றும் பொதுமக்களுக்கான வழிகாட்டுதல்கள்@CMOTamilnadu @TNDIPRNEWS

— Madurai Corporation (@mdu_corp) September 16, 2026

பக்தர்களுக்கான பிரசாத பை

  • மதுரை மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் குடமுழுக்கு விழாவையொட்டி பொதுமக்களுக்கு வழங்க சுமார் 2 லட்சம் பிரசாத பைகள் தயார் நிலையில் உள்ளன.
  • மஞ்சள், குங்குமம், விபூதி, தண்ணீர், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்கள் பிரசாத பையில் இருக்கும்.

மதுரை குடமுழுக்கு நேரலையில் பார்ப்பது எப்படி?

  • தமிழ்நாடு அரசு அறநிலையத்துறையின் அதிகாரப்பூர்வ யூ-ட்யூப் சேனலில் (@TNHRCEdepartment) நீங்கள் குடமுழுக்கு விழாவை நேரலையில் காணலாம்.
  • தொலைக்காட்சி சேனல்கள், பல்வேறு யூ-ட்யூப் சேனல்களில் குடமுழுக்கு விழாவை நேரலையில் காணலாம்.
  • மதுரையில் பேருந்து நிலையங்கள், முக்கிய வீதிகள், ரயில் நிலையம், பார்க்கிங் பகுதிகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு 51 எல்இடி திரைகள் மூலம் குடமுழுக்கு நிகழ்வு நேரலை செய்யப்படுகிறது. எனவே குடமுழுக்கை காண அனைவரும் பெரும் கூட்டத்தில் கோவிலுக்கு வர வேண்டும் என்பதில்லை.

முன்னேற்பாடு வசதிகள் விவரம்

தற்காலிக பேருந்து நிலையங்கள்

எல்லிஸ் நகர், கோரிப்பாளையம் சந்திப்பு, பழங்காநத்தம் சீட்டு ரவுண்டானா, தெப்பக்குளம் 16 கால் மண்டபம், வெஸ்டன் பார்க் ஹோட்டல் உள்ளிட்ட 5 தற்காலிக பேருந்து நிலையங்கள் மதுரை மாநகரில் அமைக்கப்பட்டுள்ளன.

மருத்துவ முகாம்கள்

70 அரசு மருத்துவர்கள் மற்றும் 150 மருத்துவப் பணியாளர்களுடன் கூடிய மருத்துவ உதவி மையங்கள் மற்றும் முகாம்கள் திருக்கோவில் வளாகம் மற்றும் சுற்றியுள்ள வீதிகளில் தயார் நிலையில் அமைக்கப்பட்டுள்ளன. 15 செஞ்சிலுவைச் சங்க தன்னார்வலர்கள், 40 வாகன ஓட்டுநர்கள் பக்தர்களின் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவசர சிகிச்சை தேவைப்படும் பக்தர்களுக்கு 108 அவசர வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

குடிநீர் வசதி

17 இடங்களில் நீர் வழங்கும் கருவிகள் (Water Dispensing Units) மற்றும் 26 இடங்களில் 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

கழிப்பறை வசதிகள்

24 இடங்களில் 225 நபர்கள் பயன்படுத்தும் வகையில் நிரந்தரக் கழிப்பறைகளும், 15 இடங்களில் 107 நபர்கள் பயன்படுத்தும் வகையில் தற்காலிக கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இதற்காக 3 சுழற்சிகளில் 264 தூய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

திடக்கழிவு மேலாண்மை

தூய்மைப் பணிகளுக்காக வழக்கமான 3 சுழற்சிகளில் 200 பணியாளர்களும் சிறப்புப் பணிக்காக 3 சுழற்சிகளில் 60 பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தகவல் பலகைகள்

பக்தர்களின் வசதிக்காக QR Code வசதியுடன் கூடிய 50 தற்காலிகத் தகவல் வழிகாட்டிப் பலகைகள் நிறுவப்பட்டுள்ளன.

வாகன நிறுத்துமிடங்கள்

பெரியார் பேருந்து நிலையத்தில் 210 வாகனங்கள் நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 55 இலவச வாகன நிறுத்துமிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

முக்கிய வீதிகளில் தரைவிரிப்பு

மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி உள்ள கிழக்கு சித்திரை வீதி, தெற்கு சித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி, ஆவணி மூல வீதிகளில் பொதுமக்கள் வந்து செல்லும் நடைபாதையில் தேங்காய் நாரினால் பிண்ணப்பட்ட தரைவிரிப்பு அமைக்கப்பட்டு, அதில் தண்ணீர் தெளிக்கப்பட்டுள்ளது.

நவீனக் கட்டுப்பாட்டு மையம்

பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உதவிக்காக 10 இடங்களில் காவல் உதவி மையங்கள் (Help Desk Centres) அமைக்கப்பட்டுள்ளன. 1800-425-6781 மற்றும் 1800-425-6782 உள்ளிட்ட இலவச அலைபேசி எண்களுக்கு அழைத்து மக்கள் உதவிக் கேட்கலாம்.

மேலும் படிக்க | மதுரை மீனாட்சியம்மன் கும்பாபிஷேகம்.. கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. எங்கு, எப்போது?

Add Zee News as a Preferred Source
TAGS:
Explainer