• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /மதுரை
  • /களைகட்டிய மதுரை... மீனாட்சியம்மன் குடமுழுக்கு - மாலை நடக்கும் சிறப்பு பூஜைகள் விவரம்

களைகட்டிய மதுரை... மீனாட்சியம்மன் குடமுழுக்கு - மாலை நடக்கும் சிறப்பு பூஜைகள் விவரம்

Meenakshi Amman Temple Kudamuzhukku: மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு நிறைவடைந்த நிலையில், காலை 10 மணிக்கு மேல் பொது தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டார்கள். ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலையில் மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெறும், இரவில் திருவீதி உலா நடைபெற உள்ளது.

Written BySudharsan G
Published: Sep 17, 2026, 10:47 AM IST|Updated: Sep 17, 2026, 10:56 AM IST
joinshare
களைகட்டிய மதுரை... மீனாட்சியம்மன் குடமுழுக்கு - மாலை நடக்கும் சிறப்பு பூஜைகள் விவரம்
Image Credit: Madurai Meenakshi Amman Kovil | AI Generated Image : ChatGPT

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா:  பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா: பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

2

சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

3

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையே ஸ்டாலினும் உதயநிதியும்தான்... சொல்பவர் அமைச்சர் சிடிஆர்

4

TNPSC Group 4 இலவசப் பயிற்சி: அக்டோபர் 15 முதல் தொடக்கம் – விண்ணப்பிப்பது எப்படி?

5

தோனியின் கபேவில் விஜய் - ராகுல் மீட்டிங்... வீட்டிலும் தனியாக ஆலோசனை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Madurai Meenakshi Amman Temple Kudamuzhukku: உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் குடமுழுக்கு கோலாகலமாக சுமார் 17 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது. மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கை முன்னிட்டு 12 கோபுரங்களிலும் புனித நீர் ஊற்றி வழிபாடு செய்யப்பட்டது.

மேலும் கும்பாபிஷேகம் நிகழ்வில் பங்கேற்ற பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. 12 கோபுரங்களிலும் ஒரே நேரத்தில் மகா தீபாராதனை நடைபெற்றபோது பக்தி முழக்கங்களை எழுப்பி பக்தர்கள் பரவசமடைந்தனர். இன்று அதிகாலை 4 மணியளவில் விக்னேஸ்வர பூஜை தொடங்கி வேத மந்திரங்கள் முழங்க வெகு விமர்சையாக குடமுழுக்கு விழா தொடங்கியது.

மேலும் படிக்க | மதுரை மீனாட்சியம்மன் கும்பாபிஷேகம்.. கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. எங்கு, எப்போது?

51 இடங்களில் எல்இடி

குடமுழுக்கு நடைபெற்றபோது அனுமதி அட்டை இல்லாதவர்கள் ஆவணி வீதிகள் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். சித்திரை வீதிகளில் அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஆங்காங்கே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நகர் முழுவதும் 51 இடங்களில் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு அதன்மூலமும் குடமுழுக்கு விழா நேரலை ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.

பொது தரிசனத்திற்கு அனுமதி

காலை 10 மணிமுதல் பொது தரிசனத்திற்கு மக்கள் அனுமதிக்கப்பட்டார்கள். கட்டண தரிசனம் செப். 20ஆம் தேதிவரை ரத்து செய்யப்பட்டுள்ளதால் அனைவருமே பொது தரிசனத்தில்தான் அனுமதிக்கப்படுவார்கள். பொது தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் மேற்கு கோபுரம் மற்றும் தெற்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவார்கள். கிழக்கு ராஜகோபுரம் வழியாக வெளியேறலாம்.

மாலை நடைபெறும் பூஜைகள்

இன்று மாலை 4 மணிக்கு மூலவர் மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். மாலை 7 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி விடைபெறுதல் என திருவீதி உலா நடைபெற உள்ளது. நாளை (செப். 18) முதல் அக்டோபர் 2ஆம் தேதிவரை மண்டல பூஜைகள் நடக்க இருக்கிறது.

மேலும் படிக்க | செப்டம்பர், அக்டோபரில் எந்தெந்த ரயில் சேவைகளில் மாற்றம்...? தெற்கு ரயில்வே அறிவிப்பு

ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம்

காலை மற்றும் மாலையில் ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்க மாசி வீதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலையில் கேசரி, வெண்பொங்கல், இட்லி, வடை மற்றும் மதியம் கேசரி, தக்காளி சாதம், தயிர் சாதம், 2 வகை காய்கறி கூட்டு ஆகியவை அன்னதானமாக வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல், பிரசாத பைகளும் சுமார் 2.50 லட்சம் அளவில் வழங்கப்பட்டது. அதில் மஞ்சள், குங்குமம், விபூதி, தண்ணீர், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.

தற்காலிக பேருந்து நிலையங்கள்

மதுரை மாநகரில் எல்லிஸ் நகர், கோரிப்பாளையம் சந்திப்பு, பழங்காநத்தம் சீட்டு ரவுண்டானா, தெப்பக்குளம், 16 கால மண்டபம், வெஸ்டன் பார்க் ஹோட்டல் உள்ளிட்ட 5 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே கோவிலுக்கு வரும் பக்தர்கள் இதை நினைவில் கொள்ள வேண்டும். பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 55 இலவச வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்களுக்காக சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

மீனாட்சியம்மன் குடமுழுக்கு விழாவில் அமைச்சர்கள் சி.டி.ஆர் நிர்மல்குமார், ரமேஷ், விஸ்நநாதன், ஜெகதீஸ்வரி, முஸ்தபா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், சட்டப்பேரவை உறுப்பினர்கள், ஆதீனங்கள், நன்கொடையாளர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

மேலும் படிக்க | மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனத்திற்கு தடை.. ஏன் தெரியுமா? பக்தர்களே நோட் பண்ணுங்க

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu