மும்பையின் கட்கோபர் கிழக்கு தொகுதியின் பாஜக எம்எல்ஏவான பராக் ஷா என்பவரின் நிகர சொத்து மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடியாகும். இவரால் எதை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள முடியும் என்ற நிலையில், இவர் தற்போது பிச்சைக்காரராக மாறி தெருக்களில் பிச்சனை எடுத்துள்ளார்.
ஒரு உன்னத நோக்கத்திற்காக பிச்சைக்காரராக மாறிய அவர் கடும் வெயிலில், கடுமையான உடல் உழைப்பை கொடுத்து, தெருவில் செல்பவர்களின் ஏச்சுபேச்சுகளை சகித்துக்கொண்டு பிச்சைக்காரராக இருந்தார். நாட்டின் பெரும் பணக்கார அரசியல்வாதிகளில் ஒருவர் இவர். இருப்பினும் அவரது ஆன்மீக குருவின் அறிவுரையை ஏற்று, ஆடம்பரக் கார்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பிற வசதிகளை அவர் தற்காலிகமாக கைவிட்டுள்ளார்.
சமண மதத்தில் சதுர்மாஸ் என்பது புனிதமாக கருதப்படும் நான்கு மாதங்களாகும். இந்த மாதத்தின்போது பாஜக எம்எல்ஏ பராக் ஷாவின் ஆன்மீக குருவான நம்ரமுனி மகாராஜ் அவருக்கு ஒரு தனித்துவமான ஆலோசனையை வழங்கியிருக்கிறார். வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தையும், மக்கள் அன்றாடம் சந்திக்கும் இன்னல்களையும் ஆழமாக உணர்ந்துகொள்ளும் வகையில், ஒரு நாள் மட்டும் பிச்சைக்காரராக வாழ்ந்து பார்க்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்
தனது குருவின் அறிவுறுத்தலை ஏற்றுதான் பராக் ஷா பிச்சைக்காரராக வாழ்ந்துள்ளார். பல கோடி ரூபாய்க்கு அதிபதியான அவருக்கு ஆளுங்கட்சி எம்எல்ஏ என்ற பரந்துப்பட்ட அதிகாரமும் இருக்கிறது. ஆனால் அவர் தனது அனைத்து வசதி வாய்ப்புகளையும் துறந்தார்.
ஒப்பனை செய்துகொண்டு பிச்சைக்காரராக மாறிய அவர் கட்கோபர் பகுதி வீதிகளில் பிச்சைக்காரராக அலைந்தார். அங்கு அவர் தெருக்களில் பிச்சை எடுத்து தெருக்களிலேயே சாப்பிட்டிருக்கிறார். வறுமையில் வாடும் ஏழை மற்றும் ஆதரவற்றோரின் உண்மையான வலியையும் அவர் தினந்தினம் சந்திக்கும் அவமானங்களையும் நேரில் அனுபவித்தார்.
அன்றைய தினம் பிச்சைக்காரர் வாழ்வில் பெற்ற அனுபவத்தை பெற்றுக்கொண்டு, தனது வீட்டிற்கு திரும்பினார். மேலும் பிச்சைக்காரர் வேடத்தை மாற்றிவிட்டு, பிச்சைக்காரராக அலைந்து திரிந்த தெருக்களுக்கு மீண்டும் சென்றிருக்கிறார். அங்குள்ள மக்களைச் சந்தித்து, அங்கு அவர்களின் நிலைமை குறித்து அவர்களுடன் உரையாடினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "பிச்சைக்காரராக இருந்தது, எனது குருவின் கட்டளையின் பேரில்... அதனால் ஒரு நாள் முழுவதும் பிச்சைக்காரர் வேடத்தில் காட்கோபர் தொகுதியில் சுற்றித் திரிந்தேன். என் குரு சொன்னது எதுவாக இருந்தாலும் அது என் நன்மைக்காகத்தான் இருக்கும்" என்றார். பணம், புகழ், அதிகாரம் ஆகியவை ஒரு மனிதருக்குள் அகங்காரத்தை உருவாக்குகின்றன என்பதை ஒப்புக்கொண்ட அவர், பிச்சைக்காரராக வாழ்ந்த அந்த அனுபவம் அவரது அகங்காரத்தை அழிக்கவும், தன்னை அடக்கத்துடன் வைத்திருக்கவும் உதவியது என கூறியிருந்தார்.
🙏 पवित्र पर्युषण पर्व पर एक प्रेरणादायी अनुभव 🙏
परम पूज्य राष्ट्रसंत श्री नम्रमुनि महाराज साहेब ने अपने प्रवचन में समाज के जरूरतमंद लोगों के प्रति संवेदनशीलता, करुणा और मानवता का संदेश दिया।
गुरुदेव की आज्ञा का पालन करते हुए वेशभूषा बदलकर घाटकोपर रेलवे स्टेशन परिसर में आम… pic.twitter.com/mFL2cWWfne— Parag Shah (@ParagShahBJP) September 14, 2026
மேலும் பிச்சைக்காரராக வாழ்ந்தபோது அவரை பாதித்த ஒரு நிகழ்வையும் உருக்கமாக பகிர்ந்துகண்டார். "பிச்சைக்காரர் வேடத்தில் நான் வசிக்கும் கட்டட வளாகத்திற்குள் சென்றபோது அவர் என்னை விரட்டிவிட்டார். எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் அடிக்கடி மற்றவர்களுக்கு உதவுபவர். எப்போதும் எனக்கு ஏதேனும் ஒன்றை வழங்க வேண்டும் என்று விரும்புபவர். ஆனால் பிச்சைக்காரர் வேடத்தில் நான் அவரிடம் சென்றபோது, அவர் என்னை விரட்டிவிட்டார்" என்று குறிப்பிட்டார். இந்த சம்பவம் அவருக்கு கசப்பான அனுபவமாக இருந்துள்ளது.