இதே செப்டம்பர் 11ஆம் தேதி, 25 ஆண்டுகளுக்கு முன், 2001ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் மீது அல்-கொய்தா பயங்கிரவாதிகள் பயணிகள் விமானங்களை கடத்தி, அவற்றை வைத்து வான்வழியாக தாக்குதல் நடத்தினர்.
இந்த பயங்கரவாத தாக்குதல் என்பது அமெரிக்காவை மட்டுமின்றி உலகையே உலுக்கியது எனலாம். இந்த பயங்கரவாத சம்பவம் நடந்து சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு, மும்பை காவல்துறையினர் இளைஞர் ஒருவரை கைது செய்தனர்.
கைதான இளைஞரால் இந்தியா மட்டுமின்றி பிரிட்டன், ஆஸ்திரேலியா என உலக நாடுகளின் புலனாய்வு அமைப்புகளே நிலைகுலைந்து போனது. அவர் யார்...? அவர் கைதின் பின்னணி என்ன? உள்ளிட்ட முழு விவரங்களையும் இங்கு விரிவாக காணலாம்.
மும்பை போலீசார் அளித்த தகவலின்படி, முகமது அப்ரோஸின் வாக்குமூலம்தான் உலகையே மிரளவைத்தது. அவர் வாக்குமூலம் அளித்ததாக வெளியான தகவல்களை இங்கு காணலாம்.
முபாரக் முசல்மான் என்ற ஆங்கிலேய தொழிலதிபர் தனக்கு பயிற்சிக்கு நிதி அளித்ததாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
அதேபோல், முகமது அப்ரோஸை பயங்கரவாத பாதைக்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மௌலானா மன்சூர் இலியாஸ் என்பவரே தூண்டினார் என்றும் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளிலும் தனக்கு விமான பைலட் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்ததாகவும் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மும்பை காவல்துறையினர் பல மாதங்கள் தீவிர விசாரணை நடத்தியும்; பல நாடுகளுக்கு நேரில் சென்றும்; இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அதிகாரிகளிடம் Letters Rogatory மூலம் தகவல் கோரியும், நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய முகமது அப்ரோஸ் மீதான குற்றச்சாட்டுகளுக்குத் தேவையான எந்தவொரு உறுதியான ஆணவங்களோ அல்லது ஆதாரங்களோ வெளிநாடுகளில் இருந்து கிடைக்கவில்லை.