Thaimaman Thanga Mothiram Thittam: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப்டம்பர் 25ஆம் தேதி மதுரையில் முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Thaimaman Thanga Mothiram Thittam: முதல்வர் விஜய் லண்டனில் இருப்பதால், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா தள்ளிப்போனது. இந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.‘
1/5
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இத்திட்டத்திற்காக தமிழக அரசு ரூ.755.83 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளது. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி (நேற்று) தொடங்கி வைப்பதாக இருந்தது.
2/5
தள்ளிப்போன தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட தொடக்க விழா
ஆனால், முதல்வர் விஜய் தற்போது லண்டனில் இருக்கிறார். தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி லண்டன் புறப்பட்டு சென்றார். செப்டம்பர் 17ஆம் தேதி லண்டனில் இருந்து சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் விஜய் லண்டனில் இருந்து தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட தொடக்க விழா தள்ளிவைக்கப்பட்டது என்றும் இத்திட்டத்தின் தொடக்க விழா குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
3/5
செப்.25 தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட துவக்க விழா
இந்த நிலையில், தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட தொடக்க விழா தேதி குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை செப்டம்பர் 25ஆம் தேதி மதுரையில் முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
4/5
தாராபுரம், மதுராந்தகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்
அதே நேரத்தில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளை உள்ளடக்கிய செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்களில் இந்த திட்டம் செய்லபாட்டுக்கு வராது. இந்த இரண்டு மாவட்டங்களை தவிர அனைத்து மாவட்டங்களில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப்டம்பர் 25ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும்.
5/5
ஜூன் 22, 2026 முதல் பிறந்த குழந்தகைளுக்கு ஒரு கிராம் மோதிரம்
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் ஜூன் 22, 2026 முதல் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்தத் திட்டம் பொருந்தும். அதே நேரத்தில், இரட்டை குழந்தைகள் பிறந்தாலும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். தங்க மோதிரம் திட்டத்திற்கான ஒப்பந்தங்களை ஜோய் ஆலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனங்கள் பெற்றுள்ள நிலையில், இரு நிறுவனங்களை மருத்துவமனைகளுக்கு மோதிரங்களை அனுப்பி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.