கொளத்தூர் சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான வி.எஸ்.பாபு, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அடுத்து, அவருடைய உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
2026 சட்டமன்ற தேர்தல் ரிசல்ட் வந்த நாளில், ஒரு பக்கம் திமுக-தவெக தொண்டர்கள் அடித்துக்கொள்ள, இன்னொரு பக்கம் ஒருவர் படு பிரபலம் ஆகிக்கொண்டிருந்தார். அவர்தான் வி.எஸ்.பாபு. இவர், தற்போது உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் உடல்நிலை இப்போது எப்படி இருக்கிறது? இதோ முழு விவரம்.
1/5
Member of the Legislative Assembly V.S. Babu
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில், தவெக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வி.எஸ்.பாபு. சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கும் இவர், ஸ்டாலின் போல ஆக்ஷன் செய்து காட்டி இணையத்திலும் பிரபலம் ஆனார்.
2/5
V.S. Babu admitted to hospital.
வி.எஸ்.பாபு சில நாட்களுக்கு முன்னதாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள எம்.ஜி.எம்.ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருடைய உடல்நிலை குறித்த அப்டேட் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.
3/5
Hospital administration issues statement on V.S. Babu's health condition.
செப்டம்பர் 18ஆம் தேதியான இன்று வெளியாகியிருக்கும் அறிக்கையின் படி, வி.எஸ்.பாபுவின் உடல் நிலை சீராக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், மருத்துவமனை நிர்வாகம், வி.எஸ்.பாபுவின் உடலை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறது.
4/5
V.S. Babu - Other Details
வி.எஸ்.பாபுவிற்கு தற்போது 75 வயது ஆகிறது. இவர், 2006ஆம் ஆண்டில் திமுகவில் இருந்தார். பின்னர், அதிமுகவிற்கு தாவினார். இப்போது தவெகவில் இருக்கிறார். 2011ஆம் ஆண்டில் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் அவரை வெற்றி பெற வைக்க பல வேலைகள் பார்த்துள்ளார்.
5/5
V.S. Babu Health Update
வி.எஸ்பாபுவின் உடல் நிலை குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.