• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /மகளிர் உரிமைத்தொகை : தீபாவளி பரிசாக ரூ.2000 கொடுக்கப்படுமா? முக்கிய அப்டேட்

மகளிர் உரிமைத்தொகை : தீபாவளி பரிசாக ரூ.2000 கொடுக்கப்படுமா? முக்கிய அப்டேட்

Written ByKarthikeyan Sekar
Published: Oct 23, 2026, 03:06 PM IST|Updated: Oct 23, 2026, 03:14 PM IST
joinshare
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தீபாவளி பரிசாக ரூ.2000 கொடுக்கப்படுமா? என்பது குறித்த முக்கிய அப்டேட்

Magalir Urimai Thogai: தமிழ்நாடு அரசு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தீபாவளி கிப்ட் ஆக 2000 ரூபாய் கொடுக்கப்படுமா? என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

Magalir Urimai Thogai latest update1/6

மகளிர் உரிமைத்தொகை முக்கிய அப்டேட்

தமிழ்நாடு அரசு மாதந்தோறும் வழங்கி வரும் மகளிர் உரிமைத்தொகை குறித்த முக்கிய அப்டேட் இப்போது வெளியாகியுள்ளது. நவம்பர் மாதத்துக்கான மகளிர் உரிமைத்தொகையை முன்கூட்டியே பெண் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
Magalir Urimai Thogai latest update2/6

புத்தாடை, இனிப்பு வாங்க பொதுமக்கள் ஆர்வம்

தீபாவளி பரிசாக இதனை கொடுக்க அரசு திட்டமிட்டிருக்கிறது. ஏனென்றால் அடுத்த மாதம், அதாவது நவம்பர் 8 ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதற்காக புத்தாடை, இனிப்பு வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டுவார்கள்.
Magalir Urimai Thogai latest update3/6

ஆயிரம் ரூபாயை முன்கூட்டியே செலுத்த திட்டம்

இதனைக் கருத்தில் கொண்டுள்ள தமிழ்நாடு அரசு இத்திட்டத்தில் பயனாளிகளாக உள்ள 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் நவம்பர் மாத தொகையான ஆயிரம் ரூபாயை முன்கூட்டியே செலுத்த திட்டமிட்டிருக்கிறது. இது பொதுமக்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்துவதுடன், விழா காலத்தில் பணத் தேவையை பூர்த்தி செய்வதாகவும் அமையும் என்றும் கருதுகிறது.
Magalir Urimai Thogai latest update4/6

மகளிர் உரிமைத்தொகை முன்கூட்டியே கிடைக்க வேண்டும்

இதுவே இத்திட்ட பயனாளிகளின் எண்ணமாகவும் இருக்கிறது. மகளிர் உரிமைத்தொகை முன்கூட்டியே கிடைக்க வேண்டும் என ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் நினைக்கின்றனர். இதனை அறிந்தே அரசு இத்தகைய முடிவை எடுத்திருக்கிறது.
Magalir Urimai Thogai latest update5/6

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை

அதேநேரத்தில், மகளிர் உரிமைத்தொகை தீபாவளி பரிசாக உயர்த்தி வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் பெண்கள் மத்தியில் இருக்கிறது. இதற்கு காரணம், முதலமைச்சர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத்தொகை மாதம் 2000 ரூபாயாக உயர்த்திக் கொடுக்கப்படும் என கூறியிருந்தார்.
Magalir Urimai Thogai latest update6/6

வாய்ப்புகள் குறைவு

அந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தீபாவளி பரிசாக மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிடுவார் என்றும் பெண்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், அரசு இப்போது இருக்கும் நிதி நெருக்கடியில் இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும், அதேநேரத்தில் முன்கூட்டியே நவம்பர் மாத மகளிர் உரிமைத்தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
TAGS:
TN Govt Schemes

Trending

  • News
  • Photos
  • Videos
Explainer: தீபாவளி போனஸ் யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு கிடைக்கும்? விதிகள் என்ன?

Explainer: தீபாவளி போனஸ் யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு கிடைக்கும்? விதிகள் என்ன?

2

சவுதி சட்டம்: பின்பற்ற வேண்டியவை என்னென்ன? எதற்கெல்லாம் தடை.. Explained

3

TET தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு HM பதவி உயர்வு எப்போது? முக்கிய அப்டேட்

4

மரங்களுக்கும் இனி ‘டிஜிட்டல் ஆதார்’: தமிழக அரசின் அதிரடி UTIS 2.0 திட்டம் – Explained

5

ஆய்வகத்தில் பாதரசத்தை தங்கமாக மாற்றிய ஸ்டார்ட்-அப்!! இனி தங்கம் விலை குறையுமா?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.