• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /தீபாவளிக்கு முன் வாழ்க்கையே மாறப்போகுது... இந்த 3 ராசிக்காரர்கள் இனி நல்ல காலம்

தீபாவளிக்கு முன் வாழ்க்கையே மாறப்போகுது... இந்த 3 ராசிக்காரர்கள் இனி நல்ல காலம்

Written BySudharsan G
Published: Nov 03, 2026, 02:14 PM IST|Updated: Nov 03, 2026, 02:22 PM IST
joinshare
நவம்பர் 6ஆம் தேதி (வெள்ளி) அன்று துலாம் ராசியில் புதன் உடன் சூரிய பகவானும், சுக்கிர பகவானும் வீற்றிருப்பார்கள். அன்றைய தினம் பல யோகங்களுடன் புதன் - சுக்கிரன் இணைவால் லட்சுமி நாராயண ராஜயோகமும் உருவாகிறது. இதனால் 3 ராசிக்காரர்களுக்கு நன்மைகள் பிறக்கும்.

நவம்பர் 6ஆம் தேதி லட்சுமி நாராயண ராஜயோகத்தால் மேஷம், துலாம், கும்பம் ஆகிய மூன்று ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். மூன்று ராசிக்காரர்களுக்கான பலன்களை இந்த புகைப்படத்தொகுப்பில் காணலாம்.

 

Lakshmi Narayan Rajayog1/6

துலாம் ராசியில் புதன், சூரியன், சுக்கிரன்

தீபாவளிக்கு முன், அதாவது நவம்பர் 6ஆம் தேதி (வெள்ளி) அன்று துலாம் ராசியில் புதன் உடன் சூரிய பகவானும், சுக்கிர பகவானும் வீற்றிருப்பார்கள். இதனால், திரிகிரஹி ராஜயோகம், புதாதித்ய ராஜயோகம், சுக்ராதித்ய ராஜயோகம் ஆகியவற்றுடன் லட்சுமி நாராயண ராஜயோகமும் உருவாகிறது. புதன் - சுக்கிரன் சேர்க்கையால்தான் லட்சுமி நாராயண யோகம் உருவாகும்.
Lakshmi Narayan Rajayog2/6

3 ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள்

லட்சுமி நாராயண யோகம் சில ராசிக்காரர்களின் வாழ்வில் நேர்மறையான பலன்களை அள்ளித்தரும். ஒருவரின் வாழ்வில் இதனால், செல்வம் அதிகரிக்கும், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள். தீபாவளிக்கு முன் உருவாகும் இந்த லட்சுமி நாராயண ராஜயோகத்தால் 3 ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும்.
Lakshmi Narayan Rajayog3/6

மேஷ ராசிக்காரர்களுக்கான பலன்கள்

தீபாவளிக்கு முன் இருந்தே மேஷ ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான நாட்கள் தொடங்கிவிடும். புதன் - சுக்கிரன் மேஷ ராசிக்காரர்களின் 7ஆம் வீட்டில் லட்சுமி நாராயண ராஜயோகத்தை உருவாக்கும். ஏற்கெனவே 5ஆம் வீட்டில் குரு பகவான் வீற்றிருக்கிறார். எனவே, உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் தேடி வரும். முதலீட்டில் நல்ல வருவாய் வரும். ஊழியர்கள் தங்களின் வேலையிடத்தில் தனித் திறமையை வெளிக்காட்டும் வாய்ப்புகள் உருவாகும். வணிகத்தில் லாபம் கொட்டும். குடும்ப உறவும் பலப்படும்.
Lakshmi Narayan Rajayog4/6

துலாம் ராசிக்காரர்களுக்கான பலன்கள்

குடும்ப விவகாரங்களில் துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். புதிய வழிகளிலும் வருமானம் வந்துசேரும். நீண்ட காலமாக முடங்கிகிடக்கும் பணம் உங்களிடம் வரும். பல வழிகளில் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் இனிமையாக நேரத்தை செலவிடுவீர்கள்.
Lakshmi Narayan Rajayog5/6

தனுசு ராசிக்காரர்களுக்கான பலன்கள்

தீபாவளிக்கு முன்னரே தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும். லட்சுமி நாராயண யோகம் தனுசு ராசிக்காரர்கள் ஜாதகத்தில் 11வது வீட்டில் உருவாகும். உங்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறும். ஊழியர்களுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும். வேலை தேடுபவர்களுக்கும் நல்ல பலன்கள் கிடைக்கும். வணிக வளர்ச்சி அடைவதற்கும் இது நல்ல காலகட்டமாகும்.
Lakshmi Narayan Rajayog6/6

பொறுப்பு துறப்பு

இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.
TAGS:
Rasipalan

Trending

  • News
  • Photos
  • Videos
தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை நீடிக்கும்.. மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை நீடிக்கும்.. மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

2

பெண்களுக்கான குட் நியூஸ்.. இந்த மாதம் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 சீக்கிரமே வரப்போகுதா?

3

அமேசான் அதிரடி தீபாவளி சலுகை: i Phone முதல் Samsung வரை.. எதில் எவ்வளவு தள்ளுபடி

4

ஆடை விற்பனை, பொருட்காட்சிகளுக்கு கிடுக்கிப்பிடி: முக்கிய உத்தரவு!

5

ரேஷன் கார்டுதாரர்களுக்கு தீபாவளி ஜாக்பாட்! இலவச மளிகை தொகுப்பு குறித்து லேட்டஸ்ட் அப்டேட்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.