யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு மத்திய அரசு கட்டணம் விதித்துள்ளது. இருப்பினும் தனிநபர் - மெர்ச்சண்ட் என்ற வர்த்தக பணப் பரிமாற்றத்திற்கு மட்டுமே இந்த கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக தெரிந்துகொள்ள இந்த புகைப்படத்தொகுப்பை காணலாம்.
யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு தற்போது கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படவில்லை. நீங்கள் எத்தனை முறை பரிவர்த்தனை செய்தாலும், எவ்வளவு அதிகமாக பரிவர்த்தனை செய்தாலும் நீங்கள் இலவசமாக பரிவர்த்தனை செய்யலாம். இந்தச் சூழலில், தனிநபர் - தனிநபர் பரிவர்த்தனையை தொடர்ந்து இலவசமாகவே பயன்படுத்தலாம். அதேவேளையில், தனிநபர் - மெர்ச்சண்ட் பரிவர்த்தனையில் கட்டணம் மாற்றப்பட்டுள்ளது.
1/5
கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்
ரூ. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம் விதிக்கப்படும் என இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) அறிவித்துள்ளது. இந்த 0.4% கட்டணம் என்பது வணிகர் தள்ளுபடி விகிதம் ஆகும். வரும் அக்டோபர் 15ஆம் தேதி முதல் இந்த கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (Image Source : X)
2/5
பூஜ்ஜிய MDR தொடரும்...
மாதம் ரூ.1 லட்சம் வரை QR மூலம் வருமானம் ஈட்டும் சிறு வியாபாரிகளுக்கு பூஜ்ஜிய MDR நடைமுறை தொடரும். வணிகப் பரிவர்த்தனைகளில் 95 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள 2,000 ரூபாய்க்கு உட்பட்ட எந்தவொரு பணப்பரிமாற்றத்திற்கும் MDR கட்டணம் கிடையாது. (Image Source : X)
3/5
அதிகபட்ச கட்டணம் எவ்வளவு...?
ரூ.75 ஆயிரம் மற்றும் அதற்கும் மேற்பட்ட வர்த்தக பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக கட்டணமாக ரூ.300 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரயில்வே, தொலைத்தொடர்பு சேவைகள், காப்பீடு, எரிபொருள் உள்ளிட்ட துறைகளில் ரூ.2,000 மேற்பட்ட யூபிஐ பரிவர்த்தனைக்கு ரூ.5 கட்டணமாக விதிக்கப்படும். (Image Source : X)
4/5
தனிநபருக்கு இடையிலான பரிவர்த்தனைக்கு கட்டணம் இல்லை
தனிநபர் டூ வர்த்தகர்களுக்கு இடையிலான பரிவர்த்தனைக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிநபர்களுக்கு இடையேயான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, Google Pay, Phonepe போன்றவற்றின் மூலம் தனிநபர்களுக்கு UPI பரிவர்த்தனை செய்பவர்கள் வழக்கம்போல் இலவச பரிவர்த்தனையையே மேற்கொள்ளலாம். (Image Source : X)
5/5
இது குறைந்த அளவிலான கட்டணம்தான்
மாற்றியமைக்கப்பட்ட இந்த UPI MDR கட்டணமானது கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் வாலட்கள் போன்ற பல டிஜிட்டல் கட்டணக் கருவிகளுடன் தொடர்புடைய கட்டணங்களை விட மிகக் குறைவாகவே உள்ளது. (Image Source : X)