October 25 Rasipalan: ஐப்பசி மாதம் 8ஆம் நாளான இன்று (அக்டோபர் 25), மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான பலன்களை இங்கு விரிவாக காணலாம். இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் உள்ளிட்ட விவரங்களையும் பார்க்கலாம்.
October 25, Today Horoscope: இன்று ஐப்பசி 8ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 25) பரபாவ வருடம்.
1/13
பொறுப்பு துறப்பு
இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.
2/13
மேஷம்
நண்பர்களிடம் வீண் விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் உழைப்பு அதிகரிக்கும். ஜாமீன் தொடர்பான செயல்களை தவிர்க்கவும். ரகசியமான சில முதலீடுகள் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். சக ஊழியர்களால் சிறு சிறு வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
அஸ்வினி : வாதங்கள் நீங்கும்.
பரணி : முதலீடுகள் மேம்படும்.
கிருத்திகை : வேறுபாடுகள் நீங்கும்.
3/13
ரிஷபம்
மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும். திடீர் பயணத்தின் மூலம் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். நினைத்த பணிகளில் அலைச்சல் அதிகரிக்கும். எதிர்ப்புகளை சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். குடும்ப நலனில் அக்கறை செலுத்தவும். முயற்சியில் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
கிருத்திகை : குழப்பம் உண்டாகும்.
ரோகிணி : மனப்பக்குவம் உண்டாகும்.
மிருகசீரிஷம் : மாற்றம் ஏற்படும்.
4/13
மிதுனம்
கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். மகான்களின் தரிசனத்தால் மனம் மகிழும். தர்மக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வேலையாட்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். தொலைதூர சுபச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். காதில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். உடன்பிறப்புகள் ஆதரவாகச் செயல்படுவார்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்
மிருகசீரிஷம் : நெருக்கம் அதிகரிக்கும்.
திருவாதிரை : ஈடுபாடு உண்டாகும்.
புனர்பூசம் : ஆதரவான நாள்.
5/13
கடகம்
நண்பர்களிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். சேமிப்பு தொடர்பான செயல்களில் சிந்தித்து செயல்படவும். எதிலும் உணர்ச்சிவசப்படாமல் செயல்படவும். நெருக்கமானவர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
புனர்பூசம் : வாதங்களை தவிர்க்கவும்.
பூசம் : சிந்தனைகள் மேம்படும்.
ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள்.
6/13
சிம்மம்
நேரம் தவறி உணவு உட்கொள்வதை தவிர்க்கவும். திடீர் பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். மற்றவர்கள் இடத்தில் சுமுகமாக பழகவும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். வியாபாரப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். சக ஊழியர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மகம் : அனுபவம் கிடைக்கும்.
பூரம் : புரிதல் உண்டாகும்.
உத்திரம் : விட்டுக் கொடுத்து செல்லவும்.
7/13
கன்னி
குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். வெளிவட்டார நட்புகள் மேம்படும். வாழ்க்கைத் துணையின் உடல்நிலையில் ஏற்ற இறக்கம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் லாபகரமான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திரம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
அஸ்தம் : நட்பு மேம்படும்.
சித்திரை : லாபகரமான நாள்.
8/13
துலாம்
நெருக்கமானவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். பயணங்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பிறமொழி மக்களின் அறிமுகம் ஏற்படும். வர்த்தக முதலீடுகளில் கவனம் வேண்டும். புதிய நபர்களால் சில மாற்றங்கள் ஏற்படும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரத்தில் இருந்த மந்தத்தன்மை குறையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்
சித்திரை : சந்திப்புகள் ஏற்படும்.
சுவாதி : அறிமுகம் ஏற்படும்.
விசாகம் : மந்தத்தன்மை குறையும்.
9/13
விருச்சிகம்
எதிர்காலம் சார்ந்த சில முயற்சிகள் கைகூடி வரும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். நண்பர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவுடன் நடந்துகொள்ளவும். உத்தியோகத்தில் எதிர்பாராத பொறுப்புகளால் அலைச்சல் உண்டாகும். புதுவிதமான கனவுகள் தோன்றும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
விசாகம் : முயற்சிகள் கைகூடும்.
அனுஷம் : கனிவு வேண்டும்.
கேட்டை : கனவுகள் பிறக்கும்.
10/13
தனுசு
நெருக்கமானவர்கள் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். வரவுகளில் மந்தநிலை காணப்படும். சுப காரியங்களில் தாமதங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய தொழில் முயற்சிகள் கைகூடிவரும். சுபகாரியச் செயல்களில் சிந்தித்து செயல்படவும். உறவுகள் மூலம் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம்
மூலம் : அலைச்சல்கள் உண்டாகும்.
பூராடம் : முயற்சிகள் கைகூடும்.
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
11/13
மகரம்
சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் நட்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். மாறுபட்ட அணுகுமுறையால் மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திராடம் : நட்புகள் கிடைக்கும்.
திருவோணம் : முதலீடுகள் அதிகரிக்கும்.
அவிட்டம் : தன்னம்பிக்கை பிறக்கும்.
12/13
கும்பம்
இணையம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களிடம் பொறுமை வேண்டும். வரவுகளில் ஏற்றமான சூழல் அமையும். வாடிக்கையாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய நட்புகள் மலரும். மனதளவில் உற்சாகம் பிறக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்
அவிட்டம் : முன்னேற்றமான நாள்.
சதயம் : ஆதரவான நாள்.
பூரட்டாதி : உற்சாகம் பிறக்கும்.
13/13
மீனம்
வியாபாரத்தில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் அதிகரிக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மையான சூழல் ஏற்படும். அரசு பணிகளில் விவேகம் வேண்டும். செயல்பாடுகளில் ஒருவிதமான படபடப்பு வந்து செல்லும். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ் திசை : வடக்கு
அதிர்ஷ் எண் : 8
அதிர்ஷ் நிறம் : வெளிர் நீல நிறம்
பூரட்டாதி : நுணுக்கங்களை அறிவீர்கள்.
உத்திரட்டாதி : ஆர்வமின்மையான நாள்.
ரேவதி : சிந்தித்து செயல்படவும்.