• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /பிஎம் கிசான் : புதிதாக விண்ணப்பிக்கலாம்! தமிழக விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

பிஎம் கிசான் : புதிதாக விண்ணப்பிக்கலாம்! தமிழக விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

Written ByKarthikeyan Sekar
Published: Oct 06, 2026, 06:32 PM IST|Updated: Oct 06, 2026, 06:37 PM IST
joinshare
PM Kisan : பிஎம் கிசான் திட்டத்தில் புதிதாக விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

PM Kisan Latest Update: பிஎம் கிசான் திட்டத்தில் புதிதாக யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?, எப்படி விண்ணப்பிக்கலாம்? என்பது குறித்த முக்கிய அப்டேட்டை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
 

PM Kisan Latest Update 2026 Tamil Nadu1/7

பிஎம் கிசான் சிறப்பு முகாம் அறிவிப்பு

பிஎம் கிசான் சிறப்பு முகாம் அறிவிப்பு : தஞ்சாவூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் கௌரவ நிதி திட்டத்தின் கீழ் விடுபட்ட தகுதியுள்ள விவசாயிகள் பயன்பெறவும், தவணைத் தொகை நிறுத்தப்பட்டவர்கள் மீண்டும் பெறவும் மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் 31.10.2026 வரை நடைபெறுகின்றன என மாவட்ட ஆட்சியர் ரேவதி தெரிவித்துள்ளார்.
PM Kisan Latest Update 2026 Tamil Nadu2/7

உதவித்தொகை பெற முடியாத விவசாயிகள் விவரம்

உதவித்தொகை பெற முடியாத விவசாயிகள் விவரம் : இத்திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத 3,084 விவசாயிகள், மின்னணு கே.ஒய்.சி. (e-KYC) முடிக்காத 1,348 விவசாயிகள் மற்றும் இவை இரண்டையுமே செய்யாத 242 விவசாய பயனாளிகள் தற்போது நிதிப் பலனைப் பெற முடியாத நிலையில் உள்ளனர்.
PM Kisan Latest Update 2026 Tamil Nadu3/7

வட்டார முகாம்கள்

குறைபாடுகளை சரிசெய்ய வட்டார முகாம்கள் : தகுதியுடைய விவசாயிகள் வட்டார அளவில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் பங்கேற்கலாம். அங்கு வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம் மற்றும் வருவாய்த்துறையினருடன் இணைந்து ஆவணக் குறைபாடுகள் சரிசெய்யப்படும்.
PM Kisan Latest Update 2026 Tamil Nadu4/7

இ-சேவை மையங்களை அணுகலாம்

வங்கிகள் மற்றும் இ-சேவை மையங்களை அணுகலாம் : வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிகளை அணுக வேண்டும், அதேபோன்று e-KYC செய்யாத விவசாயிகள் அருகிலுள்ள பொது சேவை மையங்களை (CSC) அணுகி பதிவை நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
PM Kisan Latest Update 2026 Tamil Nadu5/7

24-வது தவணை

24-வது தவணை நிதி பெற முக்கிய நடைமுறைகள் : விரைவில் பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் 24-வது தவணைத் தொகை வழங்கப்பட உள்ளது. இதனால் நில ஆவணங்களைப் புதுப்பித்தல், வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பு மற்றும் e-KYC பதிவுகளை உடனே சரிசெய்வது அவசியமாகும்.
PM Kisan Latest Update 2026 Tamil Nadu6/7

வட்டார அலுவலர்களின் தொடர்பு எண்கள்

வட்டார அலுவலர்களின் தொடர்பு எண்கள் : தஞ்சாவூர்: 9659996866, திருவையாறு: 9344209660, பூதலூர்: 8838096352, ஒரத்தநாடு: 7598244399, திருவோணம்: 9597802411, பட்டுக்கோட்டை: 8526062230, மதுக்கூர்: 7904173513, பேராவூரணி: 6381918376, சேதுபாவாசத்திரம்: 9443785789, பாபநாசம்: 9942136183, அம்மாப்பேட்டை: 9344072899, கும்பகோணம்: 9655478617, திருவிடைமருதூர்: 9080175515, திருப்பனந்தாள்: 8220719849.
PM Kisan Latest Update 2026 Tamil Nadu7/7

மாவட்ட ஆட்சியரின் முக்கிய வேண்டுகோள் :

மாவட்ட ஆட்சியரின் முக்கிய வேண்டுகோள் : தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் அனைவரும் 31.10.2026-க்குள் இந்தச் சிறப்பு முகாம்களை முழுமையாகப் பயன்படுத்தி, விடுபட்ட தகவல்களைப் பதிவு செய்து அரசு வழங்கும் நிதி உதவியைத் தொடர்ந்து பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
TAGS:
Central Govt Schemes

Trending

  • News
  • Photos
  • Videos
TAMCO, TABCEDCO அரசு கடன் முகாம்: எந்தெந்த தொழில்களுக்கு எவ்வளவு கடன் கிடைக்கும்? – முழு விவரம்!

TAMCO, TABCEDCO அரசு கடன் முகாம்: எந்தெந்த தொழில்களுக்கு எவ்வளவு கடன் கிடைக்கும்? – முழு விவரம்!

2

Explained : உலகம் முழுவதும் வரப்போகும் 4 நெருக்கடிகள்! ஜெய்சங்கர் சொன்ன பகீர் தகவல்..

3

தமிழக அரசின் இலவச லேப்டாப் சிப்-லெவல் பயிற்சி: 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு

4

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த நியூட்ரினோ ஆய்வு! இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்ற பிரான்சிஸ் ஹால்சன்

5

VDA உயர்வு: விவசாயம், கட்டுமானம்... அக்டோபர் 1 முதல் தொழிலாளர்களுக்கு அதிகரித்த குறைந்தபட்ச ஊதியம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.