Ration Card : தமிழ்நாடு முழுவதும் நாளை ரேஷன் கார்டு சிறப்பு முகாம். பொதுமக்களுக்கான முக்கிய தகவல்
Ration Card Latest News : ரேஷன் கார்டு வைத்துள்ள பொதுமக்களில் இதுவரை e-KYC முடிக்காதவர்களுக்காக நாளை சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்
1/6
குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு
குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு - தமிழ்நாடு முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்களின் விவரங்களை முழுமையாகப் புதுப்பித்து, e-KYC பதிவை 100% நிறைவு செய்யும் நோக்கில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. பொது விநியோகத் திட்ட சேவைகள் தடையின்றி கிடைக்க அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களும் இப்பதிவை மேற்கொள்வது அவசியமாகும்.
2/6
நாளை முகாம் நடைபெறும் நேரம்
நாளை முகாம் நடைபெறும் நேரம் - இச்சிறப்பு முகாம் நாளை 19.09.2026, சனிக்கிழமை அனைத்துப் பகுதி நியாயவிலைக் கடைகளிலும் முழு வீச்சில் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்களுக்கு வசதியான நேரத்தில் அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று இப்பதிவை எளிதாக முடித்துக் கொள்ளலாம்.
3/6
எங்கு சென்று பதிவு செய்ய வேண்டும்?
எங்கு சென்று பதிவு செய்ய வேண்டும்? - அந்தந்தப் பகுதிகளில் செயல்பட்டு வரும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் (ரேஷன் கடைகள்) இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குடும்ப அட்டையில் பெயர் உள்ள உறுப்பினர்கள் தங்கள் பகுதி கடைக்குச் சென்று இந்த முகாம் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
4/6
கண் கருவிழி சரிபார்ப்பு முறை
விரல் ரேகை மற்றும் கண் கருவிழி சரிபார்ப்பு முறை - நியாயவிலைக் கடைகளில் உள்ள விற்பனை முனை இயந்திரம் மூலமாகப் பயனாளிகளின் விரல் ரேகை பதிவு செய்யப்படும். ஒருவேளை முதியவர்கள் அல்லது கைரேகை சரியாகப் பதியாத நபர்களுக்கு, கண் கருவிழி ஸ்கேனிங் முறையைப் பயன்படுத்தி எளிதாகச் சரிபார்ப்பு மேற்கொள்ளப்படும்.
5/6
வெளியூரில் வசிப்பவர்களுக்கான சிறப்பு வசதி
வெளியூரில் வசிப்பவர்களுக்கான சிறப்பு வசதி - தொழில் அல்லது வேலை காரணமாக சொந்த ஊரில் இல்லாமல் வெளியூரில் தங்கியிருக்கும் குடும்ப அட்டைதாரர்கள் தங்களின் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தாங்கள் தற்போது தங்கியிருக்கும் இடத்திற்கு அருகிலுள்ள எந்தவொரு நியாயவிலைக் கடைக்கும் சென்று தங்களது e-KYC பதிவை உடனடியாகச் செய்துகொள்ள முழு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
6/6
விடுபட்டவர்களுக்கு சூப்பர் சான்ஸ்
விடுபட்டவர்களுக்கு சூப்பர் சான்ஸ் - இதுவரை ரேஷன் அட்டையில் e-KYC பதிவு செய்யாத உறுப்பினர்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது விரல் ரேகை அல்லது கருவிழி சரிபார்ப்பை உடனடியாக முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதன் மூலம் எதிர்காலத்தில் அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் மற்றும் ரேஷன் பொருட்கள் எந்தவிதத் தடையுமின்றி தொடர்ந்து கிடைக்கும்.