• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /சேலம் மாவட்டம் செவிலியர் வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி?

சேலம் மாவட்டம் செவிலியர் வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி?

Written ByKarthikeyan Sekar
Published: Sep 22, 2026, 03:58 PM IST|Updated: Sep 22, 2026, 04:11 PM IST
joinshare
Salem Nurse Recruitment : சேலம் மாவட்டத்தில் 187 செவிலியர் காலிப் பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Salem Nurse Recruitment : சேலம் மாவட்ட செவிலியர் வேலைவாய்ப்புக்கு எப்படி விண்ணப்பிப்பது? என்பது குறித்த முழுமையான விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
 

Salem Nurse Recruitment1/6

சேலம் மாவட்ட சுகாதாரத் துறை

சேலம் மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில், ஒப்பந்த மற்றும் தற்காலிக அடிப்படையில் 187 செவிலியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
Salem Nurse Recruitment2/6

தனியார் செவிலியர் கல்லூரி

கல்வித் தகுதி: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் செவிலியர் கல்லூரியில், இந்திய நர்சிங் கவுன்சில் (Indian Nursing Council - INC) அங்கீகாரத்துடன் GNM (General Nursing and Midwifery) அல்லது B.Sc. Nursing முடித்திருக்க வேண்டும்.
Salem Nurse Recruitment3/6

பேறுகால உதவியாளர்

அத்துடன் தமிழ்நாடு செவிலியர் மற்றும் பேறுகால உதவியாளர் மன்றத்தில் (Tamil Nadu Nurses and Midwives Council) தங்களின் படிப்பை முறையாகப் பதிவு செய்து, செல்லுபடியாகும் பதிவை (Valid Registration) பெற்றிருப்பது கட்டாயமாகும்.
Salem Nurse Recruitment4/6

விண்ணப்பதாரர்கள் 50 வயது

விண்ணப்பதாரர்கள் 50 வயதுக்குள் இருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் சேலம் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.salem.nic.in என்ற முகவரிக்குச் சென்று விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவண நகல்களுடன் இணைத்து, தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
Salem Nurse Recruitment5/6

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட சுகாதார அலுவலர் / நிர்வாகச் செயலாளர், சேலம் மாவட்ட நலச்சங்கம், பழைய நாட்டாண்மை கழக வளாகம், சேலம் – 636 001.
Salem Nurse Recruitment6/6

கடைசி நாள்:

கடைசி நாள்: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 26.09.2026 அன்று மாலை 5.00 மணி ஆகும். காலக்கெடு முடிந்த பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதால், செவிலியர் படிப்பை முடித்து அரசு மருத்துவத் துறையில் பணியாற்ற விரும்பும் தகுதியான நபர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
TAGS:
Tamil Nadu

Trending

  • News
  • Photos
  • Videos
ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

2

பிரதமர் மோடி சென்னை விசிட்... CM விஜய் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

3

பட்டா மாற்றம் முதல் சான்றிதழ்கள் வரை: விஏஓ அலுவலகத்திலேயே கிடைக்கும் வசதிகள் முழு விவரம்!

4

கோவை டூ நெல்லை.. பிச்சு உதறப்போகும் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை

5

RR அணியில் இருந்து வெளியேறும் ஜெய்ஸ்வால்? இந்த அணிக்குதான் செல்கிறாராம்.. முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.