தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி அன்று eKYC சிறப்பு முகாம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுவரை ரேசன் அட்டைத்தாரர்களில் 96.48% பேர் eKYC நடைமுறையை மேற்கொண்டுள்ளனர். இன்னும் மீதம் உள்ளவர்கள் eKYC சரிபார்ப்பை மேற்கொள்ள சிற்பபு முகாம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
1/5
ரேசன் கடைகளில் eKYC கட்டாயம்
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் விரல் ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை (eKYC) மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
2/5
96.48% eKYC பணி நிறைவு
அதன்படி குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதும் இடையூறுமின்றி இப்பணியினை செய்திட அறிவுறுத்தப்பட்டு கடந்த 2023ஆம் தேதி அக்டோபர் முதல் குடும்ப உறுப்பினர்களின் eKYC பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 96.48% eKYC பணியானது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
3/5
ரேசன் கடைகளில் சிறப்பு முகாம் அறிவிப்பு
இந்த eKYC பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு வரும் செப்டம்பர் 19ஆம் தேதி அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெற உள்ளது.
4/5
தவறவிடாதீர்கள் மக்களே...
எனவே, இன்னும் நியாய விலைக் கடைகள் மூலம் கைரேகை பதிவு செய்யப்படாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி அன்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் நடைபெறும் சிறப்பு முகாமினை பயன்படுத்தி eKYC பதிவினை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
5/5
இரண்டு தொகுதிகளில் கிடையாது...
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் என்றாலும் இடைதேர்தல் நடைபெற இருக்கும் மதுராந்தகம், தாராபுரம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளில் மட்டும் இந்த சிறப்பு முகாம் நடைபெறாது. மேலும், இதுபோன்ற eKYC பதிவு செய்யப்படாதபட்சத்தில் அடுத்து ரேஷன் பொருள் வாங்குவதில் கூட சிரமம் ஏற்படலாம். எனவே, விடுபட்டவர்கள் செப். 19ஆம் தேதி சிறப்பு முகாமை பயன்படுத்தவும். நீங்கள் உங்களின் சொந்த ஊரில்தான் கைரேகை வைக்க வேண்டும் என்றில்லை, ஸ்மார்ட் கார்டு நம்பர் இருந்தால் அதை வைத்து எங்கு வேண்டுமானாலும் கைரேகை பதிவு செய்யலாம்.