• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /சுக்கிரன் பெயர்ச்சி: 7 ராசிகளின் தலைவிதியே மாறப்போகுது.. நாளை முதல் ராஜயோகம்!!

சுக்கிரன் பெயர்ச்சி: 7 ராசிகளின் தலைவிதியே மாறப்போகுது.. நாளை முதல் ராஜயோகம்!!

Written BySripriya Sambathkumar
Published: Oct 23, 2026, 02:22 PM IST|Updated: Oct 23, 2026, 02:30 PM IST
joinshare
Venus Transit: சுக போகங்களின் அதிபதியான சுக்கிரன் சித்ரா நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இது 7 ராசிகளுக்கு அற்புதமான நன்மைகளை அளிக்கவுள்ளது. அந்த அதிர்ஷ்ட ராசிகளின் லிஸ்டில் உங்கள் ராசியும் உள்ளதா?

Sukran Peyarchi Palangal: நாளை (அக்டோபர் 24), சுக்கிரன் செவ்வாயின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட சித்திரை நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். அங்கு ஏற்கனவே சூரியனும் புதனும் இருப்பதால், பல சுப கிரக சேர்க்கைகள் (யோகங்கள்) உருவாகின்றன. ஜோதிடக் கணக்கீடுகளின்படி, இந்த முக்கியமான பெயர்ச்சியானது மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம் மற்றும் கும்பம் ஆகிய ஏழு ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயங்களையும், தொழில் முன்னேற்றத்தையும், செழிப்பையும் கொண்டு வரும். இவர்களது குடும்ப வாழ்விலும் மகிழ்ச்சி வரும்.

Sukran Peyarchi Palangal1/9

சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

சித்ரா நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அற்புதமான நன்மைகள் நடக்கும். இவர்கள் வாழ்வில் இது பொற்காலமாய் திகழும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Gemini2/9

மிதுனம்

சுக்கிரன் பெயர்ச்சியால், ஐந்தாம் வீட்டில் மூன்று கிரகங்களின் சேர்க்கை (திரிகிரஹ யோகம்) உருவாவதால், மிதுன ராசிக்காரர்களுக்கு திடீரென பெரிய அளவிலான நிதி ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. கலை, எழுத்து அல்லது பிற படைப்பாற்றல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பதோடு, அவர்கள் பெரும் வெற்றியையும் அடைவார்கள். வேலை தேடிக்கொண்டிருக்கும் முதுன ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
Cancer3/9

கடகம்

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு அதிக நற்பலன்களை அளிக்கும். உங்கள் வாழ்க்கை வசதிகள் கணிசமாக அதிகரிக்கும். பணி இடத்தில் ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். வீடு, வாகனம், மின்னணு சாதனங்களை வாங்குவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. இது உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும்.
Virgo4/9

கன்னி

சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கத்தால் கன்னி ராசிக்காரர்களுக்கு நிதி நிலை மிகவும் வலுவடையும். குழ்னதைகளால் நல்ல செய்தி கிடைக்கும். நீண்டகாலமாகத் தேங்கிக் கிடந்த அல்லது தாமதமான பணம் உங்களுக்குக் கிடைக்கக்கூடும். மேலும், உங்கள் பேச்சில் ஈர்ப்புத்தன்மை அதிகரித்து, மற்றவர்களை உங்கள் பக்கம் ஈர்க்கும் வகையில் அமையும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும்.
Libra5/9

துலாம்

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு அனுகூலமானதாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும். உங்கள் சொந்த ராசியிலேயே (முதல் வீட்டில்) மூன்று கிரகங்களின் சேர்க்கை உருவாவதால், உங்கள் கௌரவம், அந்தஸ்து, புகழ் மற்றும் தலைமைத்துவ பண்புகள் வியக்கத்தக்க வகையில் மேம்படும். உங்கள் ஆளுமை பிரகாசிக்கும், மேலும் சமூகத்தில் உங்களுக்கு கூடுதல் அங்கீகாரம் கிடைக்கும்.
Sagittarius6/9

தனுசு

சித்ரா நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். இது அதிக வருமானத்திற்கு வழி வகுக்கும். நீண்ட காலமாக நிறைவேறாமல் இருந்த விருப்பங்கள் பூர்த்தியாகும். மேலும், இந்த காலத்தில் செல்வாக்கு மிக்க மற்றும் முக்கியமான நபர்களுடன் தொடர்பு ஏற்படும். இது எதிர்காலத்தில் உங்களுக்கு நிதி நன்மைகளைத் தரும்.
Capricorn7/9

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி ஆக்கப்பூர்வமான மாற்றங்களைக் கொண்டுவரும். சுக்கிரன் அருளால் உங்கள் தொழில் வாழ்க்கையில் ஒரு சாதகமான திருப்பம் ஏற்படும். உங்கள் பணி அல்லது வணிகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வீர்கள். உங்கள் கடின உழைப்பிற்கு ஏற்ற பலனாக, நிதி ஆதாயங்களும் தொழில் முன்னேற்றமும் உங்களைத் தேடி வரும்.
Aquarius8/9

கும்பம்

சித்திரை நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும். நேரம் உங்களுக்குச் சாதகமாக இருப்பதால், நீங்கள் மேற்கொள்ளும் பணிகள் அனைத்தும் விரைவாக நிறைவேறும். முன்னர் செய்த முதலீடுகளால் லாபம் கிடைக்கும். ஆன்மீகம் அல்லது மதம் சார்ந்த பயணங்களை மேற்கொள்வதற்கான வலுவான வாய்ப்புகளும் உள்ளன.
Disclaimer9/9

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
TAGS:
Rasipalan

Trending

  • News
  • Photos
  • Videos
Explainer: தீபாவளி போனஸ் யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு கிடைக்கும்? விதிகள் என்ன?

Explainer: தீபாவளி போனஸ் யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு கிடைக்கும்? விதிகள் என்ன?

2

சவுதி சட்டம்: பின்பற்ற வேண்டியவை என்னென்ன? எதற்கெல்லாம் தடை.. Explained

3

TET தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு HM பதவி உயர்வு எப்போது? முக்கிய அப்டேட்

4

மரங்களுக்கும் இனி ‘டிஜிட்டல் ஆதார்’: தமிழக அரசின் அதிரடி UTIS 2.0 திட்டம் – Explained

5

ஆய்வகத்தில் பாதரசத்தை தங்கமாக மாற்றிய ஸ்டார்ட்-அப்!! இனி தங்கம் விலை குறையுமா?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.