• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /நாக்பூர் செல்ல ரூ.5000 மானியம் கொடுக்கும் தமிழ்நாடு அரசு - விண்ணப்பிப்பது எப்படி?

நாக்பூர் செல்ல ரூ.5000 மானியம் கொடுக்கும் தமிழ்நாடு அரசு - விண்ணப்பிப்பது எப்படி?

Written ByKarthikeyan Sekar
Published: Sep 28, 2026, 08:34 PM IST|Updated: Sep 28, 2026, 08:38 PM IST
joinshare
நாக்பூர் தீக்ஷா பூமிக்கு செல்ல விருப்பம் உள்ளவர்கள் 5000 ரூபாய் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அரசு கொடுக்கும் இந்த 5000 ரூபாய் மானியம் யாருக்கு கிடைக்கும்?, எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
 

Nagpur travel subsidy Tamil Nadu1/5

பௌத்தர்கள் மானியம் பெற

தமிழ்நாட்டைச் சேர்ந்த பௌத்தர்கள் நாக்பூர் தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவில் கலந்து கொள்ளும் பௌத்தர்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
Nagpur travel subsidy Tamil Nadu2/5

ரூ .5,000/- வரை மானியம்

இது குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ்நாட்டைச் சேர்ந்த பௌத்தர்கள் நாக்பூர் தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவில் கலந்து கொண்டு திரும்புபவர்களுக்கு நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ .5,000/- வரை மானியம் வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படுகிறது.
Nagpur travel subsidy Tamil Nadu3/5

விண்ணப்பங்கள் வரவேற்பு

இத்திட்டத்தின்கீழ் 2026-ஆம் ஆண்டு பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் பௌத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
Nagpur travel subsidy Tamil Nadu4/5

பதிவிறக்கம் செய்யலாம்

இதற்கான விண்ணப்ப படிவங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்து கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம். மேலும், இப்படிவங்களை www.bcmbcmw.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Nagpur travel subsidy Tamil Nadu5/5

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600005 என்ற முகவரிக்கு வருகின்ற 15.11.2026-ஆம் தேதிக்குள் அனுப்பி வைத்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.
TAGS:
Tamil Nadu

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.