• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ்: e-KYC செய்யாவிட்டாலும் பொருட்கள் உண்டு!

ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ்: e-KYC செய்யாவிட்டாலும் பொருட்கள் உண்டு!

Written ByR Balaji
Published: Sep 30, 2026, 08:11 PM IST|Updated: Sep 30, 2026, 08:14 PM IST
joinshare

e-KYC முடிக்காத தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கும் தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் தொடர்ந்து வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 

Ration Card1/5

ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ்! e-KYC செய்யாவிட்டாலும் பொருட்கள் நிறுத்தப்படாது

தமிழ்நாட்டில் e-KYC சரிபார்ப்பை இன்னும் முடிக்காத தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கும் நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Ration Card2/5

அக்டோபர் 1 முதல் பொருட்கள் நிறுத்த மத்திய அரசு உத்தரவு!

6 மாதங்களுக்கும் மேலாக நியாய விலைக் கடைகளில் பொருட்கள் வாங்காத PHH மற்றும் AAY குடும்ப அட்டைதாரர்களுக்கு அக்டோபர் 1 முதல் பொருட்கள் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்துமாறு ஒன்றிய அரசு உத்தரவிட்டிருந்தது.
Ration Card3/5

தமிழகத்தில் 96.69% பேருக்கு e-KYC நிறைவு

தமிழகத்தில் நடத்தப்பட்ட தொடர் சிறப்பு முகாம்களின் மூலம் PHH மற்றும் AAY குடும்ப அட்டைதாரர்களின் e-KYC நிறைவு சதவீதம் 96.69% ஆக உயர்ந்துள்ளது. ஜூலை மாதத்தில் 95.44% ஆக இருந்த e-KYC, செப்டம்பர் 30 நிவரப்படி அதிகரித்துள்ளது. இதன் மூலம் 4,49,663 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.
Ration Card4/5

e-KYC செய்யாதவர்கள் என்ன செய்ய வேண்டும்.

e-KYC இன்னும் முடியாத குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க நியாய விலை கடைக்கு செல்லும்போது கைவிரல் ரேகை அல்லது கண்கருவிழி சரிபார்ப்பு மூலம் தங்களது விவரங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு எந்த காரணத்திற்காகவும் ரேஷன் பொருட்கள் வழங்குவதை நிறுத்தவோ தடுக்கவோ கூடாது என அதிகாரிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
Ration Card5/5

ரேஷன் கிடைக்கும்.. ஆனாலும் e-KYC முடிப்பது அவசியம்

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் தடையின்றி வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் குடும்ப அட்டையில் e-KYC சரிபார்ப்பை விரைவில் முடித்துக்கொள்வது முக்கியம். ரேஷன் திட்டத்தில் முறைகேடுகளை தடுப்பதுடன், தகுதியான பயனாளிகளுக்கு மட்டுமே அரசின் உதவிகள் சென்றடைவதை உறுதி செய்வதற்காக e-KYC நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
TAGS:
Tamil Nadu

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.