Thaimaman Thanga Mothiram Thittam: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடங்குவது தள்ளிப்போவதாக அமைச்சர் அருண்ராஜ் அறிவித்துள்ளார். செப்டம்பர் 15ஆம் தேதி தொடக்கம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதலமைச்சர் விஜய்யின் பிரிட்டன் பயணத்தால் வேறு தேதியில் திட்டம் தொடங்கப்படும் என தெரிவித்துள்thiளார்.
Thaimaman Thanga Mothiram Thittam: இத்திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி துவங்கப்பட இருந்த நிலையில், தற்போது இத்திட்டத்தை தற்போது தமிழக அரசு தள்ளி வைக்கிறது.
1/5
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
தவெகவின் வாக்குறுதிகளில் ஒன்றாக இருப்பது தாய்மாமன் தங்க மோதிரடம் திட்டம். தற்போது தவெக அரசு ஆட்சிக்கு வந்த நிலையில், இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளார் முதல்வர் விஜய். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டமபர் 15ஆம் தேதி துவங்கி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
2/5
செப்.15 தங்க மோதிரம் திட்டம் துவங்கப்படாது
ஆனால், இத்திட்டம் தற்போது தள்ளிபோகிறது. செப்டம்பர் 15ஆம் தேதி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முதல்வர் விஜய் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைக்க இருந்தார். ஆனால், இத்திட்டம் தற்போது தள்ளிபோக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இத்திட்டம் தொடங்கும் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் எனவும் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
3/5
லண்டன் செல்லும் முதல்வர் விஜய்
ஏனென்றால், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக செப்டம்பர் 10 முதல் லண்டன் பயணம் செல்கிறார் முதல்வர் விஜய். செப்டம்பர் 16ஆம் தேதி தான் தமிழகம் திரும்புகிறார். இதனால், தங்க மோதிரம் திட்ட தொடக்க விழா தள்ளிபோகிறது. முதல்வர் விஜய் லண்டன் சென்று திரும்பியவுடன், செப்டம்பர் 20ஆம் தேதி வாக்கில் இத்திட்டம் தொடங்கப்படலாம் என கூறப்படுகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் முதல்வர் விஜய் செப்டம்பர் 15ஆம் தேதி துவங்கி வைக்க இருந்தார். தற்போது இத்திட்டத்தின் தொடக்க விழா தள்ளிபோகிறது.
4/5
தங்க மோதிரம் எப்போது துவங்கும்?
இத்திட்டத்திற்காக தமிழக அரசு ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மோதிரங்களை உற்பத்தி செய்து விநியோகிக்க ஜேய் ஆலுக்காஸ், கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளது. இரு நிறுவனங்களை மோதிரங்களை அந்தந்த மாவட்டங்களுக்கு பார்சல் அனுப்பி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு உதவி பெறும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகள் இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள் ஆவர்.
5/5
ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு
ஜூன் 22, 2026 தேதியில் இருந்து பிறந்த குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் ஒரு கிராம் மோதிரம் வழங்கப்படும். மேலும், அரசு மருத்துவமனையில் பிறக்கும் இரட்டை குழந்தைகளுக்கும் மோதிரம் வழங்கப்படும். அதோடு, கைவிடப்பட்ட குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.