SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

குருவால் உருவாகும் மங்கள யோகம்! இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.. தீபாவளிக்கு பிறகு பொற்காலம்

Guru Peyarchi: குரு செவ்வாய் சேர்க்கை நவம்பர் 12ஆம் தேதி நடக்கிறது. சிம்ம ராசியில் நடக்கும் குரு செவ்வாய் சேர்க்கையால் சில ராசிகளுக்கு நேர்மறையான ஆற்றல் உண்டாகும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written By Umabarkavi K
Published: Oct 22, 2026, 10:58 AM IST | Updated: Oct 22, 2026, 11:10 AM IST
Join

Guru Peyarchi: ஜோதிடத்தில் குரு பகவான் மிகவும் சக்திவாய்ந்த கிரகமாக பார்க்கப்படுகிறார். குருவின் பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு நேர்மறையான ஆற்றல் உண்டாகும்.  குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு 12 மாதங்களளுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அந்த வகையில், குரு பகவான் அக்டோபர் 31ஆம் தேதி சிம்ம ராசியில் பெயர்ச்சி அடைகிறார். 

அதைத் தொடர்ந்து, செவ்வாய் பகவான் நவம்பர் 12ஆம் தேதி சிம்ம ராசியில் பெயர்ச்சி அடைகிறார். 12 ஆண்டுகளுக்கு சிம்ம ராசியில் குரு செவ்வாய் ஒன்றிணைகின்றனர். இதனால், குரு மங்கள யோகம் உருவாகிறது. இதனால், சிம்ம ராசியில் குரு செவ்வாய் சேர்க்கை நடக்கிறது. குரு பகவான் அறிவு, வளர்ச்சி, மங்களகரமான தன்மையை குறிக்கிறது. செவ்வாய் தைரியம், தன்னம்பிக்கை, வெற்றியை குறிக்கிறது. குரு செவ்வாய் என இரு கிரகங்களின் சேர்க்கை போது 3 ராசிகளுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

மேலும் படிக்க: சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை.. தொழில், வேலையில் வெற்றி

மேஷம் (Aries Zodiac Sign)

குரு செவ்வாய் சேர்க்கையால் மேஷ ராசிக்காரர்களுக்கு செல்வம் அதிர்ஷ்டம் பெருகும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். கிடப்பில் போடப்பட்ட பல பணிகளை முடிப்பீர்கள். தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத வழிகளில் இருந்து பணம் ஆதாயம் கிடைக்கும். உங்கள் கடின உழைப்பிற்கு ஏற்ற பலன்களை பெறுவீர்கள். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.  வாழ்க்கைத்துணைவரின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உருவாக்கும். நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். 

உடல் தோற்றப்பொலிவில் சில மாற்றம் காணப்படும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். செய்கின்ற முயற்சிகளுக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். கல்வி தொடர்பான செயல்பாடுகளில் ஏற்ற இறக்கங்கள் உண்டாகும். எதிலும் ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். வரவுகள் தேவைக்கு இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். சகோதர வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

சிம்மம் (Leo Zodiac Sign)

குரு செவ்வாய் சிம்ம ராசியில் இணைவது இந்த ராசிக்காரர்கள் சுப பலன்களை பெறுவார்கள்.  மனதில் இருந்த குழப்பங்கள் விலகும். நிதானமான பேச்சுக்கள் உங்கள் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அடிப்படை கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். 

எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். சகோதரி வழியில் அனுகூலம் உண்டாகும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். உத்தியோக பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் இலாபம் உண்டாகும்.

மேலும் படிக்க: குரு பெயர்ச்சி பலன்கள்: அக்டோபர் 31 முதல் பட்டையை கிளப்பப்போகும் 5 ராசிகள் இவைதான்

கும்பம் (Aquarius Zodiac Sign)

செவ்வாய் குரு சேர்க்கையால் கும்ப ராசிக்காரர்களுக்கு இருந்து வந்த பிரச்னைகள் தீரும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு இருக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். பணியில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். தொழில் தொடர்பான புதிய பயணங்கள் மற்றும் அனுபவங்கள் ஏற்படும். 

வீட்டை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். வரவுகளில் இருந்த தாமதம் மறையும். உத்தியோகத்தில் திறமைக்கேற்ப முன்னேற்றம் காணப்படும். அறிவியல் சார்ந்த துறைகளில் ஈடுபாட்டுடன் கலந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் அலைச்சலும் விரயமும் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணிகளில் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனை தொடர்பான பணிகளில் இலாபம் மேம்படும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க: அக்டோபர் 28ல் சுக்கிரன் உதயம்: இந்த 3 ராசிகளுக்கு ஜாக்பாட்!
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES