நவம்பர் 16ல் உருவாகும் குரு மங்கள யோகம்.. இந்த 3 ராசிகளுக்கு பணவரவு, அதிர்ஷ்டம்!
நவம்பர் 16 அன்று சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகத்தால் தொழில், வருமானம் மற்றும் வாழ்வில் சிறப்பான பலன்களை பெறவுள்ள 3 ராசிகள் குறித்து இங்கு தெரிந்துக்கொள்வோம்.
ஜோதிடத்தின்படி, கிரகங்களின் இடப்பெயர்ச்சியும் ஒன்றுக்கொன்று இணையும் நிகழ்வுகளும் ஒவ்வொரு ராசியினரின் வாழ்க்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவை. அந்த வகையில், வரும் நவம்பர் 16 ஆம் தேதி சிம்ம ராசியில் குரு பகவானும் செவ்வாய் பகவானும் இணைகின்றனர். இந்த கிரக சேர்க்கை ’குரு மங்கள யோகம்’ என்று அழைக்கப்படுகிறது.
இந்த யோகமானது ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக, தொழில், வேலைவாய்ப்பு, பொருளாதாரம் மற்றும் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சில ராசியினருக்கு சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம். அந்த வகையில், இந்த யோகத்தால் பலனடைய வாய்ப்புள்ள 3 ராசிகள் குறீத்து பார்க்கலாம்.
மேஷம் (Aries Zodiac Signs)
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு குரு மங்கள யோகம் புதிய நம்பிக்கையையும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளையும் வழங்கலாம். நீண்ட நாட்களாக வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு தகுதியான வேலை கிடைப்பதற்கான சூழல் உருவாகலாம். ஏற்கனவே பணியில் இருப்பவர்கள் தங்களது திறமையை வெளிப்படுட்த்தி உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெற வாய்ப்புள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். இதன் மூலம் வருமானத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் உருவாகலாம். வேலை மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு சாதகமான செய்திகள் கிடைக்கக்கூடும். பொருளாதார ரீதியாக நீடித்து வந்த சில நெருக்கடிகள் குறைந்து, பணத்தை சேமிப்பதில் கவனம் செலுத்துவீர்கள்.
சிம்மம் (Leo Zodiac Signs)
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த கிரக சேர்க்கை பல்வேறு வழிகளில் சாதகமான பலன்களை வழங்கக்கூடும். குறிப்பாக, தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியான மாற்றக்களை எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து, கணவன் - மனைவி இடையே புரிதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பொருளாதாரத்தை பொறுத்தவரை எதிர்பாராத வருமான வாய்ப்புகள் கிடைக்கலாம். வியாபாரம் செய்து வருபவர்களுக்கு லாபம் அதிகரிப்பதற்கான சூழல் உருவாகலாம். புதிய தொழில் அல்லது திட்டங்களை தொடங்க நினைப்பவர்களுக்கு இது சாதகமான காலமாக அமையக்கூடும்.
மேலும், உங்களின் தன்னம்பிக்கையும் முடிவெடுக்கும் திறனும் அதிகரிக்கலாம். பணியிடத்தில் தலைமை பொறுப்புகள் கிடைப்பதற்கும், உங்களின் செயல்பாடுகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
விருச்சிகம் (Scorpio Zodiac Signs)
விருச்சிக ராசிக்காரர்களுக்கு குரு மங்கள யோகம் வாழ்க்கையில் புதிய பாதைகளை திறக்கக்கூடும். நீண்ட நாட்களாக எதிர்கொண்டு வந்த தடைகள் படிப்படியாக விலகி நினைத்த காரியங்களை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் உருவாகலாம். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிப்பதால் முக்கியமான முடிவுகளை துணிச்சலுடன் எடுக்கலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் அதிகரிக்கலாம். வாழ்க்கைத்துணையுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் சரிசெய்ய முடியும். மேலும், உயர்கல்வி பயில விரும்புபவர்களுக்கும் வெளிநாடு செல்லத் திட்டமிடுபவர்களுக்கும் சாதகமான செய்திகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்ளும் சூழலும் உருவாகலாம். ஒட்டுமொத்தமாக, தனிப்பட்ட வாழ்க்கை, கல்வி மற்றும் எதிர்கால திட்டங்கள் எனப் பல விஷயங்களில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை இந்த யோகம் எற்படுத்தக்கூடும்.
பொறுப்பு துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.