SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

2026 கேது பார்வை ஆரம்பம்: தலைகீழாக மாறப்போகும் வாழ்க்கை.. இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட்

Ketu Peyarchi: கேது பகவான் டிசம்பர் 5ஆம் தேதி சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த நேரத்தில் எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். மேலும், கேது தோஷத்தில் இருந்து விடுபடுவது குறித்த விவரத்தை இந்த தொகுப்பில் அறிந்து கொள்ளுங்கள்

Written By Umabarkavi K
Published: Nov 26, 2026, 08:28 IST | Updated: Nov 26, 2026, 08:40 IST
Image Credit: Image Source: Chatgpt
Join

Ketu Peyarchi: ஜோதிடத்தில் ராகு கேது அசுப கிரகமாக கருதப்படுகிறது.  ராகு கேதுவின் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். ராகு கேது இருவரின் பெயர்ச்சியும் சில ராசிகளுக்கு நேர்மறையான மற்றும் எதிர்மறையான ஆற்றலை கொடுக்கும்.  அந்த வகையில், 2026ஆம் ஆண்டு இறுதியில் மிகப்பெரிய ராகு, கேது பெயர்ச்சி நடக்கிறது.  இதில் நிழல் கிரகமாக கருதப்படும் கேது ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறும் நிகழ்வு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. 

கேது பெயர்ச்சி

கேது தனது நிலையை மாற்றும்போது, ​​அது பன்னிரண்டு ராசிகளையும் பாதிக்கும். இந்த வகையில், அடுத்த மாதம் டிசம்பர் 5 ஆம் தேதி , இரவு 7:38 மணிக்கு  கேது சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி அடையும். அது 2027 ஆம் ஆண்டு முழுவதும் இந்த ராசியில் நிலைத்திருக்கும். கடக ராசியின் அதிபதி சந்திரன். 

கேது பொதுவாக ஒரு அசுப கிரகமாகவும், எதிர்மறையான பலன்களைத் தரும் ராசியாகவும் கருதப்படுகிறது. இருப்பினும், இந்த முறை, ஜோதிடக் கணக்கீடுகளின்படி, கேதுவின் பெயர்ச்சியின் போது சில ராசிகள் குறிப்பிடத்தக்க பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. உங்கள் நிதி நிலைமை வலுப்பெற வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் நல்ல லாபம் பெறலாம். கேது பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகள் பயனடைவார்கள் என்பது குறித்து பார்ப்போம்.

மேலும் படிக்க: 2027 சனி பெயர்ச்சி: ஏழரை சனியில் இருந்து முழு விடுதலை.. இந்த 4 ராசிகளுக்கு துவங்கும் அதிர்ஷ்ட காலம்

மேஷம் (Aries Zodiac Sign)

கேதுவின் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு நன்மைகள் கிடைக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபம் ஈட்ட வாய்ப்புள்ளது. உங்கள் நிதி நிலைமை வலுப்பெற வாய்ப்புள்ளது. புதிய வழிகளில்  நீங்கள் வருமானம் ஈட்டலாம். ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். அலவலகத்தில் பணியாளர்களுககு சிறந்த முடிவுகளை எடுப்பீர்கள். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் இருக்கும். உங்கள் குடும்பத்தில் புதிய பொறுப்புகளை ஏற்க நேரிடலாம். 

மேலும், குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. உயர் அதிகாரிகளிடம் பாராட்டுகளை பெறுவீர்கள். பங்குச்சந்தை முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும். சுப காரிய எண்ணங்கள் கைகூடிவரும். வரவுகள் மூலம் சேமிப்புகள் உண்டாகும். பொது காரியங்களில் ஒத்துழைப்புகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

கடகம் (Cancer Zodiac Sign)

கேதுவின் பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் தரக்கூடும். இந்தக் காலகட்டத்தில் உங்கள் நிதி நிலைமை மேம்படும். உங்கள் வருமானத்தை அதிகரிக்க நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வேலை மற்றும் தொழில் தொடர்பான நல்ல வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. 

புதிய வாய்ப்புகளை நீங்கள் பயன்படுத்திக் கொண்டால், நிதி ரீதியாக மேலும் வலுவடைவீர்கள். அடுத்த 18 மாதங்களில் உங்களுக்குச் சாதகமான பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. எதிர்காலம் சார்ந்த சில பணிகளை மேற்கொள்வீர்கள். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் அமையும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். புதுவிதமான இலக்குகள் பிறக்கும்

மேலும் படிக்க: சுக்கிரன் பெயர்ச்சி: புத்தாண்டு வரை 4 ராசிகளுக்கு நல்ல காலம்.. பணம், புகழ் கொட்டும்

சிம்மம் (Leo Zodia Sign)

கேதுவின் பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களை பெறுவார்கள். உங்கள பணியில் சிறந்த பலன்கள் கிடைக்கலாம். உங்கள் மனதில் உள்ள கவலைகள்  நீங்கும். இந்தக் காலகட்டத்தில், உங்கள் எல்லாப் பணிகளிலும் நல்ல வெற்றியை அடைய வாய்ப்புள்ளது. வீடு, சொத்து, நகை வாங்கும்  யோகம் கைகூடும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு இருக்கும். வெளிநாட்டில் படிப்பதற்கான சாதகமான சூழல் உண்டாகும். திருமண தடைகள் நீங்கும். தொழிலில் வருவாய் அதிகரிக்கும். புதிய முதலீடுகள் மூலம் நல்ல லாபத்தை பெறுவீர்கள். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இது சாதகமான நேரமாக இருக்கும். மனதளவில் தெளிவுகள் ஏற்படும். குடும்பத்தில் ஆதரவு உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும்

கும்பம் (Libra Zodiac Sign)

கேதுவின் பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு நிதி பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்தக் காலகட்டத்தில் உங்கள் வருமானம் அதிகரிக்கக்கூடும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கலாம். கடந்தகாலப் பிரச்சனைகள் தீர்க்கப்படலாம். உங்கள் குடும்பத்தில் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு உங்கள் பணி, தொழிலில் சிறந்து விளங்குவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களிடமிருந்து பணியாளர்களுக்கு ஆதரவு கிடைக்கலாம். 

உயர் பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. நிதி நிலைமை மேம்படும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும். எதிர்பார்த்த சில வரவுகள் சாதகமாகும். இழுபறியான வேலைகளை முடிப்பீர்கள். வெளியூரிலிருந்து சாதகமான செய்திகள் கிடைக்கும். உறவினர்கள் வழியில் ஆதாயம் ஏற்படும். தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும்.

கேது தோஷம் நீங்க என்ன செய்யலாம்?

கேது பகவானுக்கு உகந்த கடவுளாக விநாயகரை வழிபடுவது தோஷத்தின் தாக்கத்தைக் குறைக்கும். சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பதும், விநாயகருக்கு எருக்கம்பூ மாலை அல்லது வெற்றிலை மாலை சாற்றுவதும் சிறப்பாகக் கருதப்படுகிறது ஓம் கேதவே நமஹ" அல்லது "ஓம் கம் கேதவே நமஹ" போன்ற மந்திரங்களை தினமும் 108 முறை பாராயணம் செய்யலாம். கொள்ளு, எள், போர்வை அல்லது வாழைப்பழம் போன்றவற்றை தானம் செய்வதும், பறவைகள் மற்றும் நாய்களுக்கு உணவளிப்பதும் நல்லது. கேது தோஷம் நீங்க கீழ்ப்பெரும்பள்ளம் (கேது ஸ்தலம்), திருப்பாம்புரம், பிள்ளையார்பட்டி போன்ற தலங்களைத் தரிசிக்கலாம்

(பொறுப்பு துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது)

மேலும் படிக்க: லட்சுமி நாராயண யோகம்: நாளை முதல் இந்த 4 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.. பொற்காலம் ஆரம்பம்

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

ZEENEWS TRENDING STORIES