SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

நவபஞ்சம யோகம்: இன்று முதல் இந்த 3 ராசிகளுக்கு பணமழை கொட்டும்! ஜாக்பாட் அடிக்கும்

நவம்பர் 14ஆம் தேதி சுக்கிரன் வக்ர நிவர்த்தி மற்றும் சந்திரன் பெயர்ச்சியால் உருவாகும் நவபஞ்சம யோகத்தின் மூலம் கன்னி, மகரம் மற்றும் மீனம் ஆகிய 3 ராசிகளுக்குப் பணவரவு, தொழில் முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கவுள்ளன.

Written By R Balaji
Published: Nov 14, 2026, 12:23 PM IST | Updated: Nov 14, 2026, 12:27 PM IST
Join

ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கிரகத்தின் பெயர்ச்சியும் அதன் நிலை மாற்றமும் 12 ராசிகளின் வாழ்க்கையிலும் வெவ்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்தும். அந்த வகையில், நவம்பர் 14ஆம் தேதி சுக்கிரன் மற்றும் சந்திரனின் கிரக நிலைகளால் நவபஞ்சம யோகம் உருவாக உள்ளது. இந்த யோகத்தின் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக சாதகமான சூழல் உருவாகும்.

அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரகனாக சுக்கிரன் கருதப்படுகிறார். இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். அதேபோல், மனம் மற்றும் உணர்வுகளின் காரணியாக விளங்கும் சந்திரன் கடக ராசியின் அதிபதியாக உள்ளார்.

இந்நிலையில், நவம்பர் 14ஆம் தேதி சந்திரன் மகர ராசிக்குள் பெயர்ச்சியாகிறார். இதே நாளில் கன்னி ராசியில் வக்ர நிலையில் பயணித்து வந்த சுக்கிரன் வக்ர நிவர்த்தி அடைந்து தனது வழக்கமான பயணத்தை தொடர்கிறார். இந்த இரு கிரகங்களின் நிலை மாற்றத்தால் நவபஞ்சம யோகம் உருவாகிறது.

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கிடைத்தாலும், குறிப்பாக கன்னி, மகரம், மீனம் ஆகிய மூன்று ராசிக்காரர்களுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் மற்றும் குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற சாதகமான பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

கன்னி

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு நவபஞ்சம யோகம் பொருளாதார ரீதியாக முன்னேற்றத்தை ஏற்படுத்தும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் மீண்டும் கைக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. பங்குச்சந்தையில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கக்கூடும். தொழில் செய்து வருபவர்கள் தங்களது வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதற்கான வாய்ப்புகளை பெறலாம். வேலை செய்யும் இடத்தில் உங்களது உழைப்புக்கும் திறமைக்கும் அங்கீகாரம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையை பொறுத்தவரை, வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் சூழல் அமையும். நீண்ட காலமாக இருந்து வந்த சொத்து தொடர்பான பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த நவபஞ்சம யோகம் பல்வேறு வகைகளில் நன்மைகளை வழங்கக்கூடும். குறிப்பாக, வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும். ஏற்கனவே கிடைத்து வரும் வருமானத்துடன் கூடுதலாக பணம் சம்பாதிப்பதற்கான வழிகளும் பிறக்கலாம். வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்புடைய தொழில் செய்து வருபவர்களுக்கு லாபகரமான ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் அதிகரிக்கும். சமூகத்தில் உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் உயரக்கூடும். மேலும், பரம்பரை சொத்துகள் வழியாக எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம யோகம் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த விஷயங்களில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும். இதுவரை எதிர்பார்த்து கொண்டிருந்த புதிய வாய்ப்புகள் கைகூடலாம். உங்களது தன்னம்பிக்கையும் செயல்படும் திறனும் அதிகரிக்கும். வேலை மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் புதிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. பொருளாதார நிலையும் படிப்படியாக மேம்படக்கூடும். ஏற்கனவே செய்த முதலீடுகள் மூலம் சிலருக்கு லாபம் கிடைக்கலாம். குடும்ப உறவுகளிலும் மகிழ்ச்சியான மாற்றங்கள் ஏற்பட்டு மனநிறைவு உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES