SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

சனி பெயர்ச்சி: அடுத்த 100 நாட்கள் இந்த 5 ராசிகளுக்கு பொற்காலம்.. பணம், பதவி உயர்வு தேடி வரும்!

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானால் அடுத்த 100 நாட்கள் ரிஷபம், மிதுனம், துலாம், மகரம் மற்றும் கும்ப ராசியினருக்கு தொழில் மற்றும் பொருளாதார ரீதியாக அமோக பலன்கள் கிடைக்கவுள்ளன.

Written By R Balaji
Published: Nov 02, 2026, 11:24 AM IST | Updated: Nov 02, 2026, 11:27 AM IST
Join

ஜோதிட சாஸ்திரத்தின்படி, சனி பகவான் நீதியின் கடவுளாகவும், ஒருவரின் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை வழங்குபவராகவும் கருதப்படுகிறார். இதனால் சனியின் பெயர்ச்சி, நட்சத்திர மாற்றம் மற்றும் வக்ர பெயர்ச்சி ஆகியவை 12 ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில், அக்டோபர் மாத தொடக்கத்தில் சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்திற்குள் நுழைந்தார். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை இதே நட்சத்திரத்தில் சஞ்சரிக்க உள்ளார். தற்போது சனி பகவான் வக்ர நிலையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சனியின் இந்த நிலை குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு அடுத்த 100 நாட்கள் சாதகமாக அமைகிறது. குறிப்பாக, தொழில் வளர்ச்சி, புதிய வேலைவாய்ப்புகள், பொருளாதார முன்னேற்றம் என பல்வேறு நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அப்படிப்பட்ட அதிர்ஷ்ட ராசிகள் குறித்து பார்க்கலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு அடுத்த 100 நாட்கள் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் தரக்கூடிய காலமாக அமையலாம். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். நீண்ட நாட்களாக முடிவடையாமல் இருந்த பணிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவடையலாம். உங்களுடைய உழைப்புக்கும் திறமைக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஒப்படைக்கப்படலாம். அவற்றை திறம்பட செய்து முடிப்பதன் மூலம் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளையும் பெறலாம். தொடர்ந்து மேற்கொள்ளும் முயற்சிகள் நல்ல பலன்களை தருவதுடன், வெற்றிக்கான புதிய வாய்ப்புகளும் தேடி வரலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு அடுத்த 100 நாட்கள் மகிழ்ச்சியும் நிம்மதியும் அளிக்கக்கூடிய காலமாக இருக்கலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் குறையத் தொடங்கும். பாதியில் நின்ற பல வேலைகளையும் முடிப்பதற்கான சூழல் உருவாகலாம். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான சூழல் அமையும். உங்களுடைய உழைப்புக்கு நல்ல பலன் கிடைப்பதுடன், எதிர்பாராத மகிழ்ச்சியான செய்திகளும் தேடி வரலாம். பொருளாதார ரீதியாகவும் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், முதலீடு தொடர்பான முடிவுகளை அவசரப்படாமல் நன்கு ஆலோசித்து எடுப்பது நல்லது.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு சனியின் இந்த நட்சத்திர நிலை தொழில் வாழ்க்கையில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தலாம். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்களுடைய செயல்பாடுகளுக்கு பாராட்டுகளும் அங்கீகாரமும் கிடைக்கலாம். புதிய வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது பணியில் மாற்றம் ஏற்படலாம். பொருளாதார நிலையிலும் முன்னேற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இதனால் நீண்ட நாட்களாக இருந்து வந்த பணம் தொடர்பான கவலைகள் குறைந்து தன்னம்பிக்கை அதிகரிக்கலாம்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு அடுத்த 100 நாட்கள் உழைப்புக்கான பலன்களைப் பெற்றுத் தரக்கூடிய காலமாக அமையலாம். வேலை செய்பவர்களுக்கு அலுவலகத்தில் அவர்களுடைய திறமைக்கும் செயல்பாடுகளுக்கும் உரிய பாராட்டு கிடைக்கும். புதிய பொறுப்புகளும் வழங்கப்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். புதிய வாடிக்கையாளர்கள் வருகையால் வியாபாரத்தின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. வருமானத்தைப் பெருக்குவதற்கான புதிய வழிகளும் உருவாகலாம். நீண்ட காலமாக தடைப்பட்டிருந்த பணிகள் முடிவுக்கு வருவதுடன், பொருளாதார நிலையும் முன்பைவிட வலுப்பெறலாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு அடுத்த 100 நாட்கள் பல்வேறு நிம்மதியான மாற்றங்களை கொண்டு வரலாம். நீண்ட காலமாகத் தொடர்ந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாகக் குறையத் தொடங்கும். வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகலாம். வியாபாரம் செய்பவர்களுக்கு தொழிலை விரிவுபடுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். பணவரவு தொடர்பான விஷயங்களிலும் முன்னேற்றம் ஏற்படலாம். கும்ப ராசிக்காரர்களுக்கு தற்போது ஏழரை சனியின் இறுதிக்கட்டம் நடைபெற்று வருவதால், இந்தக் காலகட்டத்தில் பொறுமையுடனும் நிதானத்துடனும் செயல்படுவது அவசியம். தொடர்ந்து முயற்சி செய்து வந்தால், அதற்கான நல்ல பலன்களைப் பெறலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES