SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

சுக்கிரன் அஸ்தமனம்: இந்த 3 ராசிகளுக்கு நவம்பர் வரை பொற்காலம்.. வெற்றி, அதிர்ஷ்டம் பெருகும்

Shukra Asta 2026: சுக்கிரன் அஸ்தமன நிலைக்கு சென்றுள்ளார். இதனால், அடுத்த 10 நாட்களுக்கு 3 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம் பெருகும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written By Umabarkavi K
Published: Oct 20, 2026, 11:07 AM IST | Updated: Oct 20, 2026, 11:17 AM IST
Join

Shukra Asta 2026: ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக சுக்கிரன் அறியப்படுகிறார். சுக்கிரனின் பெயர்ச்சி  12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சுக்கிரன் 30 நாட்களுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். சுக்கிரன் பகவான் தற்போது சொந்த ராசியான துலாம் ராசியில் பயணித்து வருகிறார். இந்த நிலையில், அக்டோபர் 19ஆம் தேதியான நேற்று சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனமாகி உள்ளார். அடுத்த 10 நாட்களுக்கு சுக்கிரன் அஸ்தமன நிலையில் இருப்பார். சுக்கிரன் அஸ்தமன நிலையில் இருப்பது சில ராசிகளுக்கு சாதகமான பலன்களை கொடுக்கும். அவை எந்தெந்த ராசிகள் என்பது குறீத்து இந்த தொகுபபில் பார்ப்போம்.

மேஷம் (Aries Zodiac Sign)

மேஷ ராசியின் 7வது வீட்டில் சுக்கிரன் அஸ்தமனமாகி இருக்கிறார். இதனால், மேஷ ராசிக்காரர்களுக்கு அடுத்த 10 நாட்கள் சிறப்பானதாக இருக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். உங்களுக்கு இருந்து வந்த சிறுசிறு பிரச்னைகள் தீரும். உங்களின் வருமானம் உயரக் கூடும். பொருளாதார நிலை உயரும். புகழ்மிக்கவர்களின் ஆதரவுகளால் சில பணிகளை செய்து முடிப்பீர்கள். புதிய பணியாளர்களை சேர்ப்பதில் ஆர்வம் உண்டாகும். 

புதிய நபர்களின் சந்திப்புகள் ஏற்படும். வருமான உயர்வை பற்றி சிந்திப்பீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். வியாபாரம் நிமித்தமாக சில நுட்பங்களை புரிந்துகொள்வீர்கள். உயர் கல்வியில் இருந்துவந்த தடைகள் விலகும். சமயோசிதமாக செயல்பட்டு நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். புதிய மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள்.

மேலும் படிக்க: சனி பகவானுக்கு பிடித்த ராசிகள் இவைதான்: அதிகம் படுத்தாமல் அருள் மழை பொழிவார் சனி

மிதுனம் (Gemini Zodiac Sign)

மிதுன ராசியின் 5வது வீட்டில் சுக்கிரன் அஸ்தமனமாகிறார். சுக்கிரன் அஸ்தமன நிலையில் இருப்பது மிதுன ராசிக்காரர்களுக்கு செல்வம் அதிர்ஷ்டம் பெருகும். உங்களுக்கு இருந்து வந்த சிறுசிறு பிரச்னைகள் தீரும். தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்து வந்த சோர்வுகள் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். 

உத்தியோகப் பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். குழந்தைகளுக்கு சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். எதிர்பாராத சில அனுபவங்கள் மூலம் புதுமையான சூழ்நிலைகள் உண்டாகும். சம்பாதிக்கும் திறன் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். உறவுகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

கடகம் (Cancer Zodiac Sign)

கடக ராசியின் 4வது வீட்டில் சுக்கிரன் அஸ்தமனமாகியுள்ளார். இதனால், கடக ராசிக்காரர்களுக்கு நிதி நிலைமை மேம்படும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளில் விவேகம் வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளை பார்க்க வேண்டிய சூழல் உண்டாகும். சுப முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சிறு சிறு விமர்சன கருத்துக்கள் ஏற்பட்டு நீங்கும்.  

கூட்டாளிகளுடன் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். எண்ணிய பணிகளில் சிறு விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். புதுவிதமான சிந்தனைகள் மனதில் இருந்து வெளிப்படும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு அவசியம். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க: மக்களே உஷார்.. சூரியன் – சனி ஷடாஷ்டக யோகத்தால் சிக்கலில் மாட்டும் 3 ராசிகள்!
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES