சுக்கிரன் பெயர்ச்சி: டிசம்பர் 5 முதல் கூடி வரும் யோகம்.. 4 ராசிகளுக்கு வெற்றி, பணம் குவியும்
Shukra Nakshatra Peyarchi: டிசம்பர் 5ஆம் தேதி சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி அடைகிறார். சுக்கிரனின் பெயர்ச்சி சில ராசிகளுக்கு நேர்மறையான ஆற்றலை கொடுக்கும். இதனால், டிசம்பர் 5 முதல் அடுத்த 17 நாட்களுக்கு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டும். எனவே, எந்தெந்த ராசிகள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Shukra Nakshatra Peyarchi: ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். சுக்கரின் செல்வம், செழிப்பு, ஆடம்பரம் உள்ளிட்டவற்றின் காரணிகளாக கருதப்படுகிறார். ரிஷபம் மற்றும் துலாம் ராசியின் அதிபதியாக சுக்கிரன் அறியப்படுகிறார். தற்போது, தனது சொந்த ராசியான துலாம் ராசியில் சுக்கிரன் பயணித்து வருகிறார். மேலும், சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திலும் பயணித்து வருகிறார்.
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி
இந்த நிலையில், டிசம்பர் மாதம் சுக்கிரனின் நட்சத்திரத்தில் பெயர்ச்சி நடக்கிறது. டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11.06 மணிக்கு சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்தில் இருந்து சுவாதி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த நட்சத்திரத்தில் சுமார் 17 நாட்கள் வரை இருப்பார். டிசம்பர் 22ஆம் தேதி மதியம் 1.59 மணிக்கு வரை சுவாதி நட்சத்திரத்தில் சுக்கிரன் நிலைத்திருப்பார். சுவாதி நட்சத்திரத்தின் அதிபதியாக ராகு இருக்கிறார்.
ராகுவின் நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி அடைவது சில ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷடத்தை கொண்டு வரப்போகிறது. இந்த பெயர்ச்சி மகரம், கும்பம், துலாம் மற்றும் கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த நான்கு ராசிகளுக்கும், சுக்கிரனின் நிலையும் அது தனது சொந்த ராசியில் இருப்பதும் சிறப்பு நன்மைகளை உருவாக்குகின்றன.
கன்னி (Virgo Zodiac Sign)
சுக்கிரன் கன்னி ராசியின் இரண்டாம் வீட்டில பெயர்ச்சி அடைகிறார். இந்த வீடு பணம், சேமிப்பு, குடும்பம் மற்றும் பேச்சு ஆகியவற்றுடன் தொடர்புடையது. முக்கியமாக, சுக்கிரன் இரண்டாம் மற்றும் ஒன்பதாம் வீடுகளுக்கு அதிபதியாக உள்ளார். எனவே, அது தனது சொந்த ராசியான துலாம் ராசியில் இரண்டாம் வீட்டில் இருப்பது, நிதி விஷயங்களுக்கு ஒரு வலுவான சூழ்நிலையை உருவாக்குகிறது.
பணியில் இருப்பவர்களுக்கு சம்பளம் உயரக் கூடும். பழைய கடன்களை அடைப்பீர்கள். நிதி நிலைமை மேம்படும். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். தொழிலதிபர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் அதிகரிக்கும். பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
துலாம் (Libra Zodiac Sign)
துலாம் ராசியின் முதல் வீட்டில் சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி நடக்கிறது. சஞ்சரிப்பார். முதல் வீடு ஆளுமை, தன்னம்பிக்கை, சுய பிம்பம் மற்றும் வாழ்க்கை திசையுடன் தொடர்புடையது. எனவே, சுக்கிரன் தனது சொந்த ராசியான சுவாதி நட்சத்திரத்தில் பிரவேசிப்பது உங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். பணியில் இருப்பவர்களுக்கு தங்கள் கருத்துக்களை திறம்பட முன்வைக்க வாய்ப்பு கிடைக்கும்.
புதிய பொறுப்புகளும் கிடைக்கும். கூட்டுத்தொழிலில் லாபம் அதிகரிக்கும்.முயற்சிகளுக்கு ஏற்ப வரவுகள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வீட்டின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். அரசு பணிகளில் சிறு சிறு அலைச்சல்கள் ஏற்படும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும்.
மகரம் (Capricorn Zodiac Sign)
மகர ராசியின் பத்தாம் வீட்டில் சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி அ டைகிறார். இந்த வீடு வீடு தொழில், வேலை, வியாபாரம், பதவி மற்றும் தொழில்முறை பிம்பத்துடன் தொடர்புடையது. முக்கியமாக, சுக்கிரன் ஐந்தாம் மற்றும் பத்தாம் வீடுகளுக்கு அதிபதியாக உள்ளார், இது மகர ராசிக்கு நன்மை பயக்கும் கிரகமாகக் கருதப்படுகிறது. இப்போது, சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசியில் பத்தாம் வீட்டில் இருப்பது, ஒரு வலுவான தொழில் வாய்ப்பை உருவாக்குகிறது.
பணியில் இருப்பவர்கள் பதவி உயர்வு, புதிய பொறுப்புகள் அல்லது ஒரு பெரிய திட்டத்தில் பணியாற்றும் வாய்ப்பைப் பெறலாம். நீண்ட காலமாக இருந்த தடைகள் நீங்கும். சுவாதி நட்சத்திரத்தில் ராகுவின் தாக்கம், உங்கள் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். முயற்சிகளில் இருந்த தாமதங்கள் விலகும். குழந்தைகளின் உயர்கல்வி குறித்த எண்ணங்கள் மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும்.
கும்பம் (Aquarius Zodiac Sign)
சுக்கிரன் கும்ப ராசியின் 9வது வீட்டில் பெயர்ச்சி அடைகிறார். இந்த விடு அதிர்ஷ்டம், கல்வி, தொலைதூர பயணங்களை குறிக்கிறது. முக்கியமாக, சுக்கிரன் நான்காம் மற்றும் ஒன்பதாம் வீடுகளுக்கு அதிபதியாக உள்ளார். இதன் காரணமாக, சுக்கிரன் கும்ப ராசிக்கு ஒரு சுப கிரகமாகவும் கருதப்படுகிறார். உங்கள் தொழில் தொடர்பான விஷயங்களுக்கு ஆதரவளிக்கும்.
மாணவர்கள் உயர்கல்வி மற்றும் வெளிநாட்டில் படிப்பதற்கான புதிய வாய்ப்புகளைக் காணலாம். பணியில் இருப்பவர்கள் அனுபவம் வாய்ந்த ஒருவரிடமிருந்து வழிகாட்டுதலைப் பெறலாம். தொழில் மாற்றத்தைத் திட்டமிடுபவர்கள் சரியான திசையைக் கண்டறியலாம். இந்த நேரம் சாதகமாக இருக்கும். கணவன் மனைவி இடையே இணக்கம் அதிகரிக்கும். திருமண தடைகள் நீங்கும்.
(பொறுப்பு துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது)
மேலும் படிக்க: புதன் பெயர்ச்சி: டிசம்பர் 2 முதல் 4 ராசிகளுக்கு ஜாக்பாட்.. பதவி உயர்வு, பணவரவு!