நடிகர் தாடி பாலாஜி இன்று சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோவில், 'மக்களின் அங்கீகாரத்தால் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துள்ள விஜய், மற்றவர்களுக்கு வழங்கிய பெரிய வாய்ப்பையும் பதவியையும் அவர்கள் தக்கவைத்துக் கொள்ளாமல் தவறிழைத்து உள்ளனர். அந்தச் செயலால் சம்பந்தப்பட்டவரின் பெயர் கெட்டதோடு, வாய்ப்பளித்த முதலமைச்சருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியிருப்பது மிகப்பெரிய தவறு. மேலும், இந்தக் காணொளியை முதலமைச்சர் விஜய் பார்க்க நேர்ந்தால், ஒரு நண்பராகவும், அவருக்கு வாக்களித்த பொதுமக்களில் ஒருவனாகவும் ஒரு வேண்டுகோள். இனிவரும் காலங்களிலாவது, தொகுதி மக்களுக்கு உண்மையாகவும் நம்பிக்கையாகவும் செயல்படக்கூடிய நபர்களை முதலமைச்சர் தனது நேரடிப் பார்வையில் தேர்ந்தெடுக்க வேண்டும்' என அவர் வலியுறுத்தி உள்ளார்.