தமிழ் திரையுலகில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த நட்சத்திர ஜோடிகள் பலர் இருக்கலாம். எந்த புதுமண தம்பதியும், காதல் ஜோடியும் தங்களது திருமண வாழ்க்கை/காதல் வாழ்க்கை சூர்யா - ஜோதிகா போல் இருக்க வேண்டும், அஜித் - ஷாலினி போல் இருக்க வேண்டும் என்றுதான் சொல்வார்கள். அதற்கு காரணம், அவர்கள் இடையே இருக்கும் காதலும், எந்த சூழலிலும் ஒருவருக்கு ஒருவர் காட்டும் ஆதரவும்தான். அந்த வகையில், அஜித் - ஷாலினி ஜோடி பொதுவெளியில் வெளிக்காட்டும் அன்பு ரசிகர்களை எப்போதுமே வியப்பில் ஆழ்த்தும். கார் ரேஸ் நடத்த ஷாலினி அனுமதித்துதான் காரணம் என அஜித் குமார் சொன்ன வீடியோ இன்றளவும் வைரல்தான். அதேபோல், ஷாலினி காலில் விழுவது குறித்து கொலு நிகழ்ச்சியில் அஜித் பேசியிருந்ததும் இணையத்தில் அதிகளவில் பரவியது. அப்படியிருக்க, அஜித் குமாருடன் காரில் லாங் டிரைவ் செல்லும் வீடியோவை ஷாலினி அவரது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதுவும் இன்று வைரலாகி உள்ளது. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் அஜித்தின் பாடல் பின்னணியில் ஒலிக்க, ஷாலினி அஜித் கார் ஓட்டுவரை செஃபி வீடியோ எடுத்துள்ளார். அப்போது அஜித் ஷாலினி பார்த்து லவ் யூ என சொல்ல இணையமே இவர்களின் காதலை பார்த்து கண் வைத்து வருகிறது.