கிரீஸில் தங்கள் திருமணத்தை முடித்துக்கொண்டு, அனிருத் ரவிச்சந்தர் மற்றும் காவ்யா மாறன் ஆகியோர் சென்னை வந்தடைந்தனர். சாதாரண உடையில் இருந்த இந்தத் தம்பதியினர், காவ்யாவின் தந்தையும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனுடன் காரை நோக்கிச் சென்றனர். அங்கு கூடியிருந்த ரசிகர்களைக் கண்ட அனிருத், அவர்களுக்கு அன்புடன் கையசைத்து பதிலளித்தார். பின்னர் காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.