பூந்தமல்லி அடுத்த மேட்டுக்கண்டிகை பகுதியில், சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையிலிருந்த ஏடிஎம் இயந்திரத்தை பெயர்த்துச் சென்று ரூ.12.54 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியான மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மிஜானூர் ரஹ்மான் முல்லா (47) கைது செய்யப்பட்டுள்ளார். வெள்ளவேடு தனிப்படை போலீசார் அவரைக் கைது செய்து, ரூ.29 ஆயிரம் ரொக்கம் மற்றும் இயந்திர உதிரிபாகங்களைப் பறிமுதல் செய்து புழல் சிறையில் அடைத்தனர்.