சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை, இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய உயர் ஆணையர் பிலிப் கிரீன் OAM நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது இரு தரப்பு உறவுகள் மற்றும் தமிழ்நாடு – ஆஸ்திரேலியா இடையிலான ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்து வருகின்றனர். அந்த வகையில், ஆஸ்திரேலிய உயர் ஆணையரின் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு தொடர்பான காட்சிகளைத் தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ளது. இரு தரப்புக்கும் இடையிலான எதிர்கால ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்து இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்திப்பின்போது அதிகாரிகள் உடனிருந்தனர். இருப்பினும், சந்திப்பில் பேசப்பட்ட குறிப்பிட்ட விவரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. தமிழகத்தின் வளர்ச்சி, கல்வி, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் ஆஸ்திரேலியாவுடனான உறவுகள் மேலும் வலுப்பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.