ஆஸ்திரேலியாவில் சுற்றுலா சென்ற 17 வயது ஆட்டிசம் பாதித்த இளைஞர், காட்டில் வழிதவறி 6 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விக்டோரியா மாகாணத்தில் உள்ள வால்ஹல்லா பள்ளத்தாக்கில் நண்பர்களுடன் முகாமிட்டிருந்த வில்லியம், கடந்த நவம்பர் 6-ம் தேதி தனியாக வெளியே சென்றபோது வழிதவறியுள்ளார். செல்போன், உணவு உள்ளிட்ட எந்தப் பொருட்களும் இல்லாமல் காட்டில் சிக்கிக்கொண்ட அவரைத் தேடும் பணியில் 80-க்கும் மேற்பட்ட மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர். இதற்கிடையே, அருகிலிருந்த ஓடையில் தண்ணீர் குடித்தும், கைவசம் இருந்த உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிட்டும் உயிர் பிழைத்துள்ளார். இரவில் குளிரிலிருந்து தப்பிக்க துணியால் உடலைப் போர்த்திக்கொண்டார். ஆறு நாட்களுக்குப் பிறகு பாறை மீது படுத்திருந்த வில்லியத்தை ஹெலிகாப்டர் குழுவினர் கண்டுபிடித்து பத்திரமாக மீட்டனர். மகன் உயிருடன் திரும்பியதால் அவரது தாயார் நெகிழ்ச்சியடைந்தார்.