பிக்பாஸ் பிரபலம் முத்துக்குமரன் மீது வஹிதா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவர் கடுமையான சட்ட விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிரட்டல் விடுத்தல், தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. வலுவான ஆதாரங்களுடன் இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், இது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாகக் கருதப்பட்டு, முத்துக்குமரனுக்கு 7 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது .