கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவியதைத் தொடர்ந்து, கோவை மாவட்டத்திலுள்ள வாளையாறு உள்ளிட்ட 12 எல்லைச் சோதனைச் சாவடிகளில் 24 மணிநேரக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கால்நடைப் பராமரிப்புத் துறையினர் வாகனங்களுக்குக் கிருமிநாசினி தெளித்து, விவரங்களைச் சேகரிப்பதுடன், கோழி, முட்டை மற்றும் தீவன வாகனங்களைத் தீவிரமாகச் சோதனை செய்த பிறகே அனுமதிக்கின்றனர்.