பாஜகவைச் சேர்ந்த சுமதி மேகவர்ணம் நமக்கு அளித்த பேட்டியில், திமுக பரப்பியதாக கூறப்படும் திரிஷாவின் AI புகைப்படம் குறித்து பேசினார். அதில், "சித்தாந்தம் இதெல்லாம் தாண்டி, அவரு இந்த தமிழ்நாட்டோட முதல்வர். அவருக்கு முதல்வருக்கான மரியாதை கொடுக்க வேண்டும். தயவுசெய்து இந்த மாதிரி பேசாதீர்கள், இதை நயினார் நாகேந்திரனே சொல்லியிருக்கிறார். அதேபோல இந்த சால்வை போட்டதை தயவுசெய்து அதை கொச்சைப்படுத்தாதீர்கள். அவர்கள் போய் ஒரு மரியாதை நிமித்தமாக சால்வை போடும் போது, அதில் நீங்கள் வந்து ஒரு அர்த்தம் கண்டுபிடிக்கிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவுக்கும் வயித்தெரிச்சல். விஜய்க்கு நயினார் நாகேந்திரன் போட்ட அந்த சால்வையே மாதிரியே ஒரு AI-ல வந்து திரிஷா அவர்கள் ஒரு புடவை கட்டிட்டு இருக்க மாதிரி ஒரு புகைப்படத்தை கிரியேட் செய்து, அதை போட்டு ப்ரமோட் பண்ணி, எவ்ளோ கேவலமான விஷயங்களை நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். இதற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன். தேவையில்லாமல் இந்த மாதிரி ஒரு சுமூகமா ஒரு நட்பு ரீதியில செய்யிற விஷயத்தை எல்லாம் வந்து அசிங்கப்படுத்தி வதந்திகளைப் பரப்புவது சரியான விஷயமே கிடையாது" என்றார்.