சென்னை திருவொற்றியூர் ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோயிலில் மூன்றாவது நாளாக நடைபெற்று வரும் ஆதிபுரீஸ்வரர் கவச திறப்பு விழாவிற்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்து வருகின்றனர். இந்நிலையில், பக்தர்களின் வசதிக்காக மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த மொபைல் கழிவறை பூட்டிக் கிடந்ததால் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனைப் பார்த்த முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், கழிவறை வாகனம் ஏன் பூட்டப்பட்டுள்ளது? பக்தர்கள் எப்படி பயன்படுத்துவார்கள்? எனக் கேள்வி எழுப்பினார். தண்ணீர் இல்லை என்பதால் கழிவறை பூட்டப்பட்டுள்ளதாகப் பராமரிப்பாளர் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.