பயணிகளை ஏற்றுவதில் போட்டி போட வேண்டிய நடத்துநர்கள், ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு தினமும் ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று இரவு இரண்டு வெவ்வேறு பேருந்துகளின் நடத்துநர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பேருந்தை நிறுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினையா அல்லது பயணிகளை ஏற்றுவதில் ஏற்பட்ட போட்டியா எனத் தெரியவில்லை. ஆனால், சிறிது நேரத்திலேயே வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இருவரும் ஒருவரையொருவர் சட்டையைப் பிடித்து சரமாரியாகத் தாக்கிக்கொண்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள், சக நடத்துநர்கள் தலையிட்டு இருவரையும் விலக்கினர். இதனைப் பயணி ஒருவர் செல்போனில் வீடியோ எடுக்க, தற்போது அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.