கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே கட்டியங்குப்பம் பகுதியில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய சுகாதாரத் துறையினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். கடந்த அக்டோபர் 28ஆம் தேதி முதல் பல்வேறு கோழிப் பண்ணைகளில் ஆயிரக்கணக்கான கோழிகள் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்ட பண்ணைகளில் இருந்த கோழிகள் கல்லிங் முறையில் அப்புறப்படுத்தப்பட்டன. இந்நிலையில், டெல்லியில் இருந்து வந்த மத்தியக் குழுவினர், கிராம மக்களிடமும் பண்ணைத் தொழிலாளர்களிடமும் காய்ச்சல், சளி, இருமல் பாதிப்புகள் குறித்து விசாரித்தனர்.