தாம்பரம் ,அகரம் தென் பிரதான சாலை திருவஞ்சேரியில் செயல்பட்டு வரும் மாருதி சுசுகி கார் சர்வீஸ் மையத்தின் மேல்தளத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. கார்சர்வீஸ் மையத்திற்குள் ஊழியர்கள் உள்ளே இருந்தபோது எதிர்பாராத விதமாகப் பற்றிய தீ, அங்கிருந்த பொருட்களின் மீது மளமளவெனப் பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. கட்டிடத்திலிருந்து கரும்புகை வெளியேறியதைக் கண்ட ஊழியர்களும், அக்கம்பக்கத்தினரும் கார் ஷோரூம் விட்டு வெளியேறி உடனடியாகத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாம்பரம் தீயணைப்பு வீரர்கள், மேலும் தீ பரவமல் இருப்பதற்கா போராடி தீயை அனைத்தனர். மேலும், இந்த விபத்தில் சர்வீஸ் மையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மற்றும் உதிரிபாகங்கள் ஏதேனும் சேதமடைந்தனவா, அல்லது பணியில் இருந்தகவர்களுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த முழுமையான தகவல்களும் இதுவரை தெரியவரவில்லை. தொடர்ந்து சேலையூர் போலீசார் நடத்திய விசாரனையில் ஏசியில் இருந்து ஏற்பட்ட முன்கசிவே தீவிபத்திற்க்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.